இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் குழந்தைகள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ரீல்ஸில் ஆடல், பாடல், நடனம் எனப் பலவிதமாக செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ரீல்ஸ் வீடியோகவும், பாடல்களாகவும், சினமா வசனங்களாகவும் இருக்கலாம். இதற்கு ஏற்ப தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் புது வசதிகள், அப்டேட் வெளிவந்துள்ளது. ஃபோனில் உள்ள இரண்டு கேமராக்களையும் பயன்படுத்தி ரீல்ஸ் செய்வது, வித விதமான ரெம்பிளேட் எனப் பல புது […]
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் குழந்தைகள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ரீல்ஸில் ஆடல், பாடல், நடனம் எனப் பலவிதமாக செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ரீல்ஸ் வீடியோகவும், பாடல்களாகவும், சினமா வசனங்களாகவும் இருக்கலாம். இதற்கு ஏற்ப தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் புது வசதிகள், அப்டேட் வெளிவந்துள்ளது. ஃபோனில் உள்ள இரண்டு கேமராக்களையும் பயன்படுத்தி ரீல்ஸ் செய்வது, வித விதமான ரெம்பிளேட் எனப் பல புது வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. என்னென்ன வசதிகள் என்பதைப் பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம் டூயல் ரீல்ஸ்
இன்ஸ்டாகிராம் டூயல் ரீல்ஸில் உங்கள் ஃபோன் முன்புற, பின்பற கேமரா பயன்படுத்தி ரீல்ஸ் செய்யலாம். பின்புற கேமராவில் வீடியோவும், முன்புற கேமராவில் உங்கள் ரீயாக்சனும் பதிவு செய்யலாம். பின்புற கேமரா வீடியோ பெரிதாகவும், முன்புற கேமராவில் பதிவான உங்க ரீயாக்சனும் சேர்ந்து ரீல்ஸாக கிடைக்கும். இதற்கு,
ஃபோனில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு செல்ல வேண்டும்.
அங்கு கொடுக்கப்பட்டுள்ள (+)ஐகானை கிளிக் செய்து ‘ரீல்’ ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.
அதன்பின் நிறைய ஆப்ஷன்கள் வரிசைப்படுத்தி வரும், அதில் சென்று அனைத்து ஆப்ஷகள் காண்பிக்கும்படி செய்து, டூயல் என்று கொடுக்கப்பட்டுள்ள கேமரா ஐகானை செலக்ட் செய்ய வேண்டும்.
அதில் நடுவில் உள்ள ரெக்கார்ட் (Record) ஐகானை கிளிக் செய்து வீடியோ பதிவு செய்யலாம்.
ரீல்ஸ் ரெம்பிளேட்
ரீல்ஸ் ரெம்பிளேட் பயன்படுத்த, திரைக்கு மேல் வலதுபுறத்தில் உள்ள கேமரா ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். ரீல்ஸ் செய்ய வேண்டிய போட்டோ, வீடியோவை கொடுக்க வேண்டும். ரெம்பிளேட் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள மியூசிக், பிற வசதிகள் மாற்றி ரீல்ஸ் ரெம்பிளேட் பயன்படுத்திக் கொள்ளலாம்.
15 நிமிட வீடியோ இனி ரீல்ஸாக மாற்றப்படும்
பயனர்கள் பதிவிடும் 15 நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோக்கள் மட்டுமே இனி வீடியோ சென்ஷனில் இடம்பெறும். 15 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்கள் அனைத்தும் தானாகவே ரீல்ஸ் பக்கத்திற்கு மாற்றி வந்துவிடும்படி புது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment