கிராமத்து ஸ்டைலில் மொறு மொறு வெல்ல தோசை....
- Get link
- X
- Other Apps
வெல்ல தோசை சுவையானதும் மட்டுமல்ல சத்தானதும் கூட.
இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
வெல்லம் (பொடித்தது) - 1 கப்
பச்சரிசி மாவு - கால் கப்
தேங்காய் (துருவியது) - கால் மூடி
ஏலக்காய் - 4, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.
வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.
வெல்லத்திற்கு பதில் கருப்பட்டியை சேர்த்தும் செய்யலாம்.
ALSO READ : முளை கட்டிய பயறு வகைகளை காலை உணவாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment