நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Blockchain Technology என்றால் என்ன? இதில் டெவலப்பராவதற்கு தேவையான திறன்கள் என்ன?

 பிளாக்செயின் டெக்னலாஜி மிகவும் பிரபலமானதற்கு முக்கிய காரணம் அதன் வெளிப்படைத்தன்மை.


கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வரும் சிறந்த தொழில்நுட்பமாக இருந்து வருகிறது பிளாக்செயின் டெக்னாலஜி (Blockchain Technology). இது பரவலாக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை போன்ற சுவாரஸ்யமான அம்சங்களுக்காக உலகளவில் பின்பற்றப்பட்டு வரும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒன்றாகும்.

அடுத்த தலைமுறைக்கான, நம்பிக்கைக்குரிய, புரட்சிகரமான தொழில்நுட்பமாக உள்ள பிளாக்செயின் டெக்னாலஜி வேகமாக வளர்ந்துள்ளது. இது நம்முடைய பிசினஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ப்ராசஸை முற்றிலும் மாற்றியுள்ளது. இந்த டெக்னலாஜியை பற்றி உங்களுடைய புரிதலுக்கு சொல்வதென்றால், இது Google Docs-ஐ போலவே உள்ளது. ஆனால் அதை விட இது சற்று சிக்கலானது மற்றும் மேம்பட்டது என கூறலாம். பிளாக்செயின் டெக்னாலஜி என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, இது ஏன் மிகவும் பிரபலமாக உள்ளது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கே பார்க்கலாம்.



பிளாக்செயின் டெக்னாலஜி என்றால் என்ன?

பிளாக்செயின் டெக்னாலஜி என்பது ஒரு டிஜிட்டல் லெட்ஜர் அல்லது ஒரு நெட்வொர்க்கில் இருக்கும் பல கணினிகளில் உள்ள பரிவர்த்தனைகளின் பட்டியலைச் சேமிக்கும் ஒரு ட்ராக்கிங் ஷீட் (tracking sheet) ஆகும். ஒரு வகை டிஜிட்டல் லெட்ஜர் டெக்னலாஜியான இது சிஸ்டமை மாற்றுவது, ஹேக் செய்வது, கரப்ட் செய்வது அல்லது ஏமாற்றுவது போன்ற தகவல்களை, குறிப்பாக பரிவர்த்தனைகளை (transactions) ரெக்கார்ட் செய்கிறது. இது ஒரு பரவலாக்கப்பட்ட விநியோக நெட்வொர்க் (decentralized distribution network) ஆகும்.

ஏனென்றால் ரெக்கார்ட் செய்யப்படும் பரிவர்த்தனைகள் பிளாக்செயினில் உள்ள கம்ப்யூட்டர் சிஸ்டம்களின் முழு நெட்வொர்க்குடன் விநியோகிக்கப்படுகின்றன மற்றும் நகலெடுக்கப்படுகின்றன. பிளாக்செயினில் ஒரு புதிய பரிவர்த்தனை செய்யப்படும் போதெல்லாம், அதன் ரெக்கார்ட்கள் ஒவ்வொரு பங்கேற்பாளரின் லெட்ஜரிலும் சேர்க்கப்படும். அனைத்து மாற்றங்களும் ரியல்-டைமில் ரெக்கார்ட் செய்யப்படுவதால், எந்த ஒரு நபரும் என்ட்ரிகளை மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது, இது முற்றிலும் வெளிப்படையானது.


அதாவது பிளாக்செயினில் உள்ள லெட்ஜர் ஒரு பரவலாக்கப்பட்ட லெட்ஜர் என்பதால் இதில் பதிவாகும் டேட்டாக்களின் மீது யாருக்கும் கட்டுப்பாடு இல்லை. அப்படியே யாராவது அதை மாற்ற அல்லது சிதைக்க முயற்சித்தால், அவர்கள் விநியோகிக்கப்பட்ட அனைத்து வெர்ஷன்களிலும் செயினில் உள்ள ஒவ்வொரு பிளாக்கையும் மாற்ற வேண்டும், இது நடைமுறையில் மிகவும் சிக்கலானது. மேலும் லெட்ஜரில் பதிவாகும் பரிவர்த்தனைகள் உரிமையாளரின் டிஜிட்டல் கையொப்பத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. இதனால் எந்த மாற்றத்தையும் அல்லது மோசடி முயற்சியையும் விரைவாக கண்டறிய முடியும்.

ஏன் பிரபலமானது?

பிளாக்செயின் டெக்னலாஜி மிகவும் பிரபலமானதற்கு முக்கிய காரணம் அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் மாற்ற முடியாத தன்மையும் ஆகும். இது ஒரு பரவலாக்கப்பட்ட பியர்-டு-பியர் நெட்வொர்க் அமைப்பாகும். மேலும் இது பிற பரிவர்த்தனைகளை போல அதை நிர்வகிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பான நபரை கொண்டிருக்க தேவை இல்லை.


மேலும் இந்த டெக்னலாஜி யூஸர்கள் மற்றும் அதை மேம்படுத்துபவர்கள் பற்றிய பரஸ்பர புரிதலின் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் பதிவுகளை எளிதில் சிதைக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது என்பதால் பரிவர்த்தனைகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவி நம்பகதன்மை கொண்டதாக உள்ளது. இதனால்தான் பிட்காயின்ஸ் போன்ற பிளாக்செயின் தயாரிப்புகள் நிதி, விநியோகச் சங்கிலி, சுகாதாரம், உற்பத்தி போன்ற துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

பிளாக்செயின் டெக்னலாஜியின் நன்மைகள்:

பாதுகாப்பானது:

இது டிஜிட்டல் கையொப்பங்களைப் பயன்படுத்தி மோசடி இல்லாத பரிவர்த்தனைகளை உருவாக்குவதால் மிகவும் பாதுகாப்பானது. மேலும், முன்னறிவிப்பின்றி எந்தவொரு தனிநபராலும் தரவுகளில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது.

பரவலாக்கப்பட்ட சிஸ்டம்:

டிரெடிஷ்னல் பரிவர்த்தனைகளுக்கு, பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் சில ஒழுங்குமுறை அல்லது மையப்படுத்தப்பட்ட அமைப்பின் ஒப்புதல் தேவைப்பட்டாலும், இந்த தொழில்நுட்பத்துடன் கையாளுதல்கள் யூஸர்களின் பரஸ்பர ஒருமித்த சரிபார்ப்புடன் செய்யப்படுகின்றன. எனவே எந்த மூன்றாம் தரப்பும் தேவையில்லை.


வேகமான ப்ராசஸிங்:

இந்த தொழில்நுட்பம் ப்ரோகிராம் செய்ய கூடியது மற்றும் தேவைக்கேற்ப பல செயல்களையும் நிகழ்வுகளையும் ஆட்டோமேட்டிக்காக செய்ய கூடியது.

பிளாக்செயின் டெவலப்பர்களாக மாறுவது எப்படி?

பிளாக்செயின் நெறிமுறையின் அடிப்படையில் அல்காரிதங்களை உருவாக்குதல், நிரலாக்கம் செய்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் பிளாக்செயின் முனைகளில் இயங்குதல் ஆகியவை பிளாக்செயின் டெவலப்பர்களின் முக்கிய பணிகள். இவர்களின் திறன் தொகுப்பு மற்றும் அறிவு 3D மாடலிங் மற்றும் 3D உள்ளடக்க மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது, இது கேம் டெவலப்பர்களுக்கு மிகவும் ஒத்ததாகும்.


ஒருவர் பிளாக்செயின் டெவலப்பராக மாறுவதற்கான தேவைகள்:

* இதற்கான முதல் படி பிளாக்செயின் டெவலப்பராக விரும்பும் நபர் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பப் பின்னணியுடன் தொடர்புடைய துறைகளில் இருக்க வேண்டும், மற்ற டெவலப்பர்களைப் போலவே, C++, Python, Java போன்ற அடிப்படை ப்ரோகிராமிங் லாங்குவேஜஸை அறிந்திருக்க வேண்டும். தரவு கட்டமைப்புகள் மற்றும் வழிமுறைகளைப் புரிந்து கொள்வதுடன் சிக்கல் தீர்க்கும் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும்.

* ஆர்க்கிடெக்ச்சர் மற்றும் கிரிப்டோகிராஃபி உள்ளிட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


* Blockchain-ன் அடிப்படைகளை கற்ற பிறகு, தேவையான டெவலப்பர் டூல்ஸ் மற்றும் Blockchain ப்ரோகிராமிங் லாங்குவேஜஜை பற்றிய அறிவைப் பெறுவது அவசியம். இதில் ஸ்மார்ட் கான்ட்ராக்ட்ஸ் எழுதுதல், ஒருமித்த வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்பத்தில் நடைமுறை அனுபவத்தைப் பெறுதல் ஆகியவை அடங்கும்.

* பிளாக்செயின் ப்ரோகிராமிங்கை கற்று கொண்டவுடன், அடுத்த கட்டத்தில் பரவலாக்கப்பட்ட அப்ளிகேஷன்களை (decentralized applications) உருவாக்கவும், மேம்படுத்தவும் கற்று கொள்வது அடங்கும். இருப்பினும் ஒரு பிளாக்செயின் டெவலப்பராக அல்லது பொறியியலாளராக மாற விரும்பினால், ஒருவருக்கு சில திறன்கள் அவசியம்.



பிளாக்செயின் டெவலப்பராக ஆவதற்கு தேவையான திறன்கள்..

* டேட்டா ஸ்ட்ரெக்ச்சர் மற்றும் அல்காரிதம்ஸ் :

பிளாக்செயின் என்பது கிரிப்டோகிராஃபி அடிப்படையிலான தரவு கட்டமைப்பாகும் மற்றும் பல செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை சார்ந்துள்ளது. எனவே, இந்தத் துறையில் பணிபுரியும் எவருக்கும் டேட்டா ஸ்ட்ரெக்ச்சர் மற்றும் அல்காரிதம்ஸ் பற்றிய அனுபவம் அவசியம்.

* ஹை-லெவல் ப்ரோகிராமிங் லேங்குவேஜ் :

C++, C#, JavaScript, Python, Ruby, அல்லது Java போன்ற ப்ரோகிராமிங் லேங்குவேஜ்கள் Blockchain தொழில்நுட்பத்திற்கு மிகவும் அவசியமானவை. எனவே இவற்றில் ஒன்றிலாவது ஒருவர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கிரிப்டோகிராஃபி :

கிரிப்டோகிராஃபி என்பது எந்த தேர்ட்-பார்ட்டியையும் ஈடுபடுத்தாமல் அழிக்க மற்றும் மாற்ற கடினமாக இருக்கும் வெவ்வேறு நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை பாதுகாப்பதற்கான வழி. பிளாக்செயின் தொழில்நுட்பம் இதை அடிப்படையாக கொண்டது.

ஸ்மார்ட் கான்ட்ராக்ட்ஸ் :

Smart contracts என்பது பிளாக்செயினில் இயங்கும் செல்ஃப்-எக்சிகியூட்டிங் கான்ட்ராக்ட்ஸ் ஆகும். பிளாக்செயினில் இயங்கும் ப்ரோகிராம் அல்லது ஸ்கிரிப்ட் போன்றது. இது பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது. எனவே இதை நன்கு கற்பது எப்போதும் ஒரு பிளஸ் பாயிண்ட். பிளாக்செயின் தொழில்நுட்பத்தை கற்று கொள்ள பல்வேறு சான்றிதழ் படிப்புகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் இந்த துறையில் சாதிக்க உங்களை மேம்படுத்தி கொள்ளுங்கள்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்