சிசிடிவியில் பதிவான பயம் முறுத்தும் வெள்ளை உருவம் - பேயா?
- Get link
 - X
 - Other Apps
 
இணையத்தில் மர்மமான வெள்ளை உருவம் உலாவும் காணொளி வெளியாகி அமானுஷ்ய விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
டிவிட்டரில் ‘பாரநார்மாலிட்டி இதழ்’ என்ற பக்கத்தில் 33 வினாடிக்கு ஒரு அமானுஷ்ய காணொளி பதிவிடப்பட்டது. அதில் ஒரு வெள்ளை தோற்றம் கொண்ட நெளிந்த மனிதன் போன்ற உருவம், குனிந்த நிலையில் மெதுவாகச் சுற்றிச் சுற்றிப் பார்த்து நகர்வது தெரிகிறது.
இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த வினோத காணொளி கடத்த 9 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள கென்டுக்கி என்னும் இடத்தில் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தில் இந்த காணொளி சம்பந்தமாகப் பெருமளவு கேள்விகள் எழுப்பப்பட்டு உலகளவில் அமானுஷ்ய விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதற்கு மிகப் பெரிய காரணமாக அமைத்தது ஸ்பெக்ட்ரல் (Spectral) என்னும் ஆங்கில திரைப்படம். ஸ்பெக்ட்ரல் திரைப்படத்தில் இதே போன்ற ஒரு மனித வடிவிலான உருவம் அழிவை ஏற்படுத்தும். அதனை வைத்து இந்த உருவத்தை அமானுஷ்யமாகப் பார்க்கின்றனர் ஆவிகள் மீது ஆர்வம் கொண்டோர் சிலர்.
ALSO READ : ஹோட்டலுக்கு வந்த பார்சலில் இருந்த அரிய வகை லாப்ஸ்டர் - திகைத்துப்போன ஊழியர்கள்;
- Get link
 - X
 - Other Apps
 

Comments
Post a Comment