Kim Kardashian போல தோற்றமளிப்பதற்காக 40 சர்ஜரி செய்துகொண்ட பெண், மீண்டும் தனது நிஜ முகத்தை திரும்ப பெற, அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் ஜெனிஃபெர். இதற்கு அவர் செய்யப்போகும் செலவு 120 ஆயிரம் டாலர்கள்.
Kim Kardashian போல தோற்றமளிக்க 40 அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்ட பெண் ஒருவர், மீண்டும் தனது பழைய முகம் வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளார். இதுவரை அந்த நாற்பது அறுவை சிகிச்சைகளுக்கு நான்கு கோடிக்கு மேல் செலவு செய்துள்ள இவர், அடுத்து செய்துகொள்ளபோகும் சிகிச்சைக்கு 120 ஆயிரம் டாலர்களை செலவு செய்யவுள்ளார்
அமெரிக்காவைச் சேர்ந்த மாடலான ஜெனிஃபெர் பாம்ப்லோனா என்ற பெண் ஒருவர், ஹாலிவுட் மாடல் அழகி, நடிகை கிம் கார்டாஷியனை போல தோற்றமளிக்க வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளார். இதனால் அறுவை சிகிச்சைகளை செய்துக்கொள்ள முடிவு செய்து, கடந்த 12 வருடங்களாக சிகிச்சைகள் மேற்கொண்டார்.
இதுவரை 40 அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ள ஜெனிஃபெர், இந்த சர்ஜரிகளுக்கு மொத்தம் 600 ஆயிரம் டாலர்கள் செலவு செய்துள்ளார். இதன் இந்திய மதிப்பு கிட்ட தட்ட 5 கோடி.
17 வயதாக இருக்கும்போது ஆரம்பித்த இந்த மோகம், தற்போது இவருக்கு சலிக்கத் துவங்கியுள்ளது. காரணம், எல்லோரும் இவரை கார்டாஷியன் என்று தான் அடையாளம் காண்பதாகவும், தன் பெயரை மறந்துவிட்டனர் என்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இவருக்கு 17 வயது இருக்கும்போது தான், கிம் கார்டாஷியனும் ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார்.
இதனால், மீண்டும் தனது நிஜ முகத்தை திரும்ப பெற, அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் ஜெனிஃபெர். இதற்கு அவர் செய்யப்போகும் செலவு 120 ஆயிரம் டாலர்கள்.
பார்ப்பதற்கு கார்டாஷியனை போல இவர் இருப்பதால், சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஃபாலோவர்கள் அதிகரித்தனர். ஆரம்பத்தில் ஆசையாக இருந்தது, போகப் போக போதையாக மாறிவிட்டது என்றும், எப்போதும் தன் அழகை பாதுகாத்துக்கொள்ள ஏதாவது ஒன்று செய்துகொண்டே இருக்கவேண்டியதாக உள்ளதால், மனவுளைச்சலுக்கு ஆளாகிவிட்டார் ஜெனிஃபெர்.
இஸ்தான்புல்லில் இருக்குமொரு அறுவை சிகிச்சை நிபுணர் இவருக்கு உதவ முன்வந்துள்ளார். இப்போது இவர் செய்துகொள்ளப்போகும் சிகிச்சை சற்று கடுமையானதாக இருக்கும். இருந்தாலும் தனக்கு வாழ்வின் அர்த்தம் புரிந்துவிட்டதால், இந்த கண்டத்தை கடக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
தன் சிகிச்சைக்கு பிறகு, தன்னை போலவே கஷட்ப்படும் நபர்களுக்கு உதவ ஒரு அமைப்பை இந்த இஸ்தான்புல் மருத்துவரோடு சேர்ந்து துவங்கவும் உள்ளார்.
Comments
Post a Comment