நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோசாஃப்ட்டின் புதிய லேப்டாப் - சிறப்பம்சங்கள் என்ன.?

 Microsoft Surface Laptop Go 2 | மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 என்ற புதிய மாடல் லேப்டாப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஸ்பேஸ் கொண்டதாகும்.


கணினி, லேப்டாப், மென்பொருள் ஆகியவற்றில் உலக அளவில் முதன்மையான நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாஃப்ட் சமீபத்தில் அறிமுகப்படுத்திய, ‘மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2’ இப்போது இந்தியாவில் வணிக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ரீடைல் ஸ்டோர்கள், அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற ஆன்லைன் மற்றும் சில்லறை கணினி மென்பொருள் விற்பனைகளிடம் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய மாடலின் விலை என்ன?

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ள மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் விலை ரூ.73,999-ஆகவும், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் விலை ரூ.80,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவன வாடிக்கையாளர்களுக்காக சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலில் மேலும் இரண்டு வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.79,090 ஆகவும் மற்றும் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.1,04,590 ஆகவும் உள்ளது.


சிறப்பம்சங்கள் என்னென்ன?

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 சிறந்த மென்பொருள் வசதிகளை கொண்டுள்ளது. இது விண்டோஸ் 11 அவுட்-ஆஃப்-பாக்ஸுடன் வருகிறது. இந்த லேப்டாப் கற்றல் மற்றும் வேலைக்காக தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அதிகப்படியான அனுபவத்தை வழங்குவதற்காக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதனை எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் 1.12 கிலோ எடையை மட்டுமே கொண்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 ஆனது வெளிப்புறத்தில் அலுமினியம் மற்றும் பிளாட்டினத்தின் உலோக பூச்சுடன் பளபளக்கிறது.


மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 ஆனது 12.4 இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்பிளேவுடன் வசதியையும், 1,536×1,024 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது.

லேப்டாப் 11வது ஜெனரல் இன்டெல் கோர் i5-1135G7 CPU இலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இன்டெல் ஐரிஷ் Xe GPU ( Intel Iris Xe GPU ) உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி LPDDR4xரேம் மற்றும் 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.


மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலில், ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட், யுஎஸ்பி டைப்-ஏ போர்ட், வயர்லெஸ் கனெக்ட்டிவிட்டி போர்ட், புளூடூத் 5.1, வைஃபை 6 போன்ற கனெக்‌ஷன் வசதிகளை கொண்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நீண்ட நேர தேவைக்காக பவர் புல் பேட்டரி சப்போர்ட்டை கொடுத்துள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 ஆனது 41Wh பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 13.5 மணி நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்பதால், சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட தேவையில்லை.

இத்துடன் HD கேமரா, டூயல் ஃபார்-ஃபீல்ட் ஸ்டுடியோ மைக்ஸ் மற்றும் டால்பி ஆடியோ பிரீமியம் கொண்ட ஓம்னிசோனிக் ஸ்பீக்கர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலில் பேக்லிட் கீபோர்ட் சிறப்பம்சம் மட்டும் இடம் பெறுமா, இல்லையா என்பது பற்றிய தெளிவான விளக்கம் வெளியாகவில்லை.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!