நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

 Vitamin B12: நம் உடலுக்கு மிகவும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் பி 12. இதன் முக்கியத்துவம் பலருக்கு தெரிவிதில்லை .


  • உடலுக்கு மிகவும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் பி 12.
  • இதன் முக்கியத்துவம் பலருக்கு தெரிவிதில்லை.
  • வைட்டமின் பி 12 சத்தினால் கிடைக்கும் நன்மைகள்..

வைட்டமின் பி 12  சத்தின் முக்கியத்துவம்:  உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து டி.என்.ஏ சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாட்டுகளுக்கு விட்டமின் B12 தேவைப்படுகிறது. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் B12 மிகவும் முக்கியம்.இதன் முக்கியத்துவம் பலருக்கு தெரிவிதில்லை. வைட்டமின் B12 குறைபாடு பலருக்கு வெளிர் தோல் நிறம், நாவின் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம், வாய் புண்கள், தோலில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு, பலவீனமான கண்பார்வை, எரிச்சல், மனச்சோர்வு போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். வைட்டமின் B12 குறைபாடு உங்கள் மன வலிமை, செயல் திறனை குறைக்கும். 

வைட்டமின் பி12  நிறைந்த உணவுகள்

வைட்டமின் B12  குறைபாடு இருந்தால், அது பல உடல் நல சிக்கல்களை ஏற்படுத்தும். நம் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க, தினசரி உணவில் இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் போன்ற  பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சைவ உணவு இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சைவ உணவு பிரியர்கள் பால், தயிர், பன்னீர் அல்லது சீஸ் சாப்பிடலாம். இதன் மூலம், உங்களுக்கு இயற்கையாகவே வைட்டமின் பி 12 கிடைக்கும்.

வைட்டமின் பி 12  சத்தினால் கிடைக்கும் நன்மைகள்

1. ரத்த சோகை ஏற்படாது

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த சோகை இருக்காது. இதன் குறைபாட்டினால் இரத்த சிவப்பணுக்கள் குறையத் தொடங்குவதால், இந்த ஊட்டச்சத்து  குறைவாக உள்ளவர்கள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள்.

2. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியம்

வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி12 உள்ள உணவை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் இந்த முக்கிய ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், குழந்தை பிறக்கும் போது மூளை மற்றும் முதுகுத்தண்டில் பிரச்சினைகள் ஏற்படலாம்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!