நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சோர்விலிருந்து விடுபட இதை ஃபாலோ பண்ணுங்க........

 சோர்விலிருந்து நாம் விடுபடுவதற்கு நம்மிடம் புழக்கத்தில் இருக்கும் சில வழிகளையே தேர்ந்தெடுத்து அதன் மூலம் சோர்வை விரட்டலாம்.  


  • உடல் சோர்வை போக்குவதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றன
  • காலை உணவை எப்போதும் தவிர்க்கக்கூடாது
  • தண்ணீரை அடிக்கடி குடித்தால் சோர்வு நீங்கும்.

வேகமாக ஓடும் இந்தக் காலத்தில் அனைவருக்குமே தவறாக வரும் ஒன்று சோர்வு. அதனைப் போக்க பலர் பல வழிகளை தேர்ந்தெடுத்தாலும் அதில் பெரும்பாலும் அவர்கள் வெற்றி காண்பதில்லை. ஆனால் நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் வழிகளை வைத்தே சோர்வை விரட்டலாம்.

தண்ணீர்:

உடலுக்கு தண்ணீர் போதிய அளவில் இருந்தால்தான் சீராக இயங்கும். உடலில் நீர் சரியான அளவில் இல்லாவிட்டால், உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வை உண்டாக்கி, கவனச்சிதறலை அதிகரித்துவிடும். எனவே அவ்வப்போது தண்ணீரைக் குடித்தால் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.

உடற்பயிற்சி:

தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். எனவே ரன்னிங், வாக்கிங், யோகா, சைக்கிளிங் போன்ற எளிமையானசில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டால் மாற்றத்தை அனுபவிக்கலாம்.

தூக்கம்:

தூக்கமின்மை சோர்வை உண்டாக்குவதோடு, உடலின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தினமும் சரியான அளவு தூங்குவதோடு ஒரே மாதிரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும்.

அதிகப்படியான எடை:

உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

அடிக்கடி சாப்பிடவும்:

கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை சாப்பிடவும் மற்றும் சிறு இடைவெளியில் ஏதேனும் ஆரோக்கியமான உணவுப் பொருளை சாப்பிட்டவாறு இருக்கவும். இப்படி சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். உடல் எடை அதிகரிக்குமோ என்ற அச்சம் வேண்டாம்..

அதுமட்டுமின்றி காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரு நாளில் காலை உணவுதான் மிகவும் முக்கியமானது. காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தாலே, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.


ALSO READ : நாள் முழுவதும் சோர்வு ஏற்படாமல் இருக்க உதவும் ‘மேஜிக்’ டிரிங்க்ஸ்........


Comments

Popular posts from this blog

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Belly Fat: தொப்பை வெண்ணெய் போல் கரைய ‘3’ எளிய பயிற்சிகள்!...

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!