Fake Loan App: போலி லோன் செயலிகளை கண்டுபிடிக்க வழிகள்.....
- Get link
- X
- Other Apps
போலி கடன் செயிலிகள் அதிகமாக இருப்பதால் யூசர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்
- போலி லோன் செயலிகள்
- தனிநபர் தகவலுக்கு ஆபத்து
- அடையாளம் கண்டுகொள்ள வழி .
மக்களின் தேவையறிந்து ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. சில செயலிகள் சரியான முறையில் கடன்களை வழங்கி வசூல் செய்யும் நிலையில், சில செயலிகள் மோசடி வேலைகளையும் அரங்கேற்றுகின்றன. தனிநபர் தகவல்களை திருடி, மிரட்டுதல் மூலம் பணம் பறிக்கும் கும்பல்களும் இருக்கின்றன. இத்தகைய செயலிகளின் மிரட்டல்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை அறிந்து கொண்டு, அதன் மூலம் பணம் பெறுவது மட்டுமே ஒரே வழி.
இல்லையென்றால், நீங்கள் டவுன்லோடு செய்யும் லோன் செயலிகள் இன்ஸ்டால் செய்யும்போதே வாடிக்கையாளர்களின் தொடர்பு விவரங்களை எடுத்துக் கொள்ளும். ஒருவேளை கடன் வாங்கியவர் சரியான நேரத்தில் பணத்தை செலுத்தவில்லை என்றால் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு அழைப்பு கொடுத்து உங்களை மிரட்டச் செய்வார்கள். இதுகுறித்து நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். அதனால், அந்த செயலியின் பின்புலத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
உண்மையா? போலியா? கண்டுபிடிப்பது எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில், அங்கீகாரம் பெறாத 600 கடன் செயலிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதில் இருக்கும் செயலிகள் பற்றிய விவரங்களை நீங்கள் அறியவில்லை என்றாலோ? இணையத்தை பயன்படுத்தி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருவேளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்ய முற்பட்டால், அதன் மதிப்பீடு, மதிப்பாய்வை கண்டிப்பாகப் படிக்கவும்.
அதன் மூலம் எந்த நிறுவனம் என்பதை அறிந்து, அதனுடைய டிராக் ரெக்கார்டையும் தெரிந்து கொள்ளலாம். நிறுவனத்தின் இணையதளம், தொடர்பு விவரங்கள், அலுவலக முகவரி ஆகியவற்றையும் சரிபார்க்கவும். குறிப்பாக, இந்தியாவில் அந்த செயலியின் அலுவலகம் எங்கு உள்ளது என்ற தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். போலியான அல்லது மோசடியான ஆப்ஸ் பெரும்பாலும் இதுபோன்ற தகவல்களை மறைத்துவிடும். லோன் ஆப்ஸ்கள் தனியார் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கும். அப்படி இல்லை என்றால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
முறையான செயலிகள் அடிப்படையான சில தகவல்களை வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் கேட்டுப் பெறுவார்கள். ஆனால் போலி செயலிகள் அத்தகைய அனுமதி இல்லாமல் அவர்களாகவே தொடர்பு எண்களை எடுத்துக் கொள்வார்கள். வெளிப்படைத்தன்மையில் ஏதேனும் சிறு சந்தேகம் ஏற்பட்டாலும், அந்த செயலியில் பணம் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள். பணத்துக்கு ஆசைப்பட்டீர்கள் என்றால் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும். மேலும், செயலாக்க கட்டணம், வட்டி விகிதம், அபராதம் மற்றும் திருப்பிச் செலுத்துதல் பற்றிய முழுமையான விவரங்கள் போலி செயலிகளிடம் வரைமுறையாக இருக்காது. இவையெல்லாம் இல்லையென்றால், அந்த செயலியில் பணம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
ALSO READ : சோர்விலிருந்து விடுபட இதை ஃபாலோ பண்ணுங்க........
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment