நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோக் மற்றும் ஓரியோவில் ஆம்லெட்டா.? வைரலாகும் புதிய வீடியோ.!

 ஒரு இந்திய உணவக விற்பனையாளர், கோக் மற்றும் ஓரியோவை சேர்த்து ஆம்லேட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


மக்கள் தங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும் ஒரு பொருளாக முட்டை உள்ளது. முட்டையில் செய்யப்படும் உணவுகளை பொதுவாக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஆம்ப்லேட், ஆப்பாயில், கலக்கி என இந்த முட்டையை பல வகைகளில் நாம் சமைக்கிறோம். தற்போது ஒரு இந்திய உணவக விற்பனையாளர், கோக் மற்றும் ஓரியோவை சேர்த்து ஆம்லேட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அந்த கடை விற்பனையாளர் கடாயில் சில துளிகள் எண்ணெய்யை சூடாக்குவதுடன் அந்த கடாயில் மேலும் ஒரு சிறிய கோக் பாட்டிலை முழுவதுமாக ஊற்றினார். அதன் பிறகு கடாயில் அவர் ஓரியோ பிஸ்கட்களின் ஒரு சிறிய பேக்கெட்டை எடுத்து அதிலுள்ள அனைத்து பிஸ்கட்களையும் நசுக்கி போட்டு, ஆம்லெட்டுக்கு சுவையான மற்றும் விசித்திரமான ஒரு சார்ஸைத் தயார் செய்தார். இது பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் வினோதமாக தோன்றலாம்

ஓரியோவில் நாம் நிறைய வகையான டிஷ்களை பார்த்திருக்கிறோம். ஓரியோ மில்க் ஷேக், ஓரியோ கேக், என லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகும் ஆனால் இந்த டிஷ் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருப்பது ஆச்சரியமானதாகவும் உள்ளது.

சார்ஸ் செய்து முடித்தபின் அந்த விற்பனையாளர் ஒரு கிளாஸில் நன்கு கலக்கிய முட்டையை ஏற்கனவே ரெடி செய்து வைத்த அந்த சார்ஸில் சேர்க்கிறார். இந்த உணவு சாதாரண ஆம்லெட்டைப் போல திருப்பி போட முடியாத அளவுக்கு ஈரமானதாக இருந்தாலும் அதை அவர் கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் அடுத்த வேலையை செய்ய ஆரம்பிக்கிறார்.

உணவுக்கான ரொட்டி தயாரிப்பதைத் தொடங்கிய அவர், கிட்டத்தட்ட 4-5 பழுப்பு ரொட்டி துண்டுகளை வெட்டி, பின்னர் அவற்றை வாணலியல் ரெடி செய்த கலவையுடன் சேர்த்து கலக்கினார்.


அந்த ஆம்லெட்டை புரட்டுவது மிக கடினமாக இருந்த போதிலும், அவர் முயற்சியை கைவிடவில்லை, அதிலுள்ள உணவுகளில் சில துளிகள் கீழே விழுந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவர் கவனம் முழுவதையும் அந்த டிஷ் தயாரிப்பதில் மட்டுமே செலுத்தினார்.

பின்னர் அவர் சமைத்த ரொட்டியின் மீது சிறிதளவு வெங்காயம், கொத்தமல்லி மற்றும் நொறுக்கப்பட்ட ஓரியோ பிஸ்கட்கள் சேர்த்து பரிமாறினார்.

இந்த வீடியோவை பார்த்தவர்களில் சிலர் அசுரத்தனம் என்று கூறினாலும், ஒருவர் அந்த வீடியோவை கேலி செய்யும் வகையில் நீங்கள் சமையல் செய்வதை விட்டு விட்டு அந்த பாத்திரத்தை சாக்கடையில் வீசுவது நல்லது எனவும், மற்றொருவர் ஆம்லெட் புரட்டுவதை பார்த்து தான் வியப்படைந்ததாகவும் மேலும் உங்களுக்கு தேவைப்பட்டால் fevicol பயன்படுத்துங்களேன் ஆம்லெட் அடுத்த முறை கடாயில் ஒட்டிக்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

ஆம்லெட்டிற்கான செய்முறை காலம் காலமாக ஒன்றுதான், அது ஒவ்வொரு குடும்பங்களிலும், உணவகங்களிலும் வேறுபடலாம் . இருப்பினும், உணவை தயாரிப்பதற்கான அடிப்படை பொருள்கள் பொதுவாக முட்டை, எண்ணெய், வெண்ணெய், உப்பு மற்றும் மிளகு இவை தான், நாம் விரும்பினால் காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம்.

இந்த புதிய கோக், ஓரியோ ஆம்லெட் சோஷியல் மீடியாவில் வைரலானாலும் இது பெரும்பாலான மக்களிடையே தேவையற்ற ஒரு விஷயமாகவே பேசப்படுகிறது.


ALSO READ : உடல் எடையை குறைக்க கொரியன்ஸ் பின்பற்றும் விநோத பழக்கம்.....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்