நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடேங்கப்பா.. இந்த தலையணையின் விலை ரூ.45 லட்சமா.! அப்படி என்ன ஸ்பெஷல்......

 இந்த தலையணை எகிப்திய பருத்தி மற்றும் மல்பெரி பட்டு ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளது.


பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அவற்றில் சிலவற்றை பார்க்கும் போது ஏன் இதற்கு இவ்வளவு விலை என்கிற சந்தேகம் கூட நமக்கு வரக்கூடும். இப்படிப்பட்ட வகையை சேர்ந்த ஒரு பொருளை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். ஆம், ஒரு தலையணையின் விலை ரூ.45 லட்சமாம்!

நீங்கள் படிப்பது சரிதான். இது உங்களுக்கு அதிர்ச்சியானதாக கூட இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. ஏன்? எதற்கு இந்த தலையணையின் விலை இவ்வளவு விலை உயர்வாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? இதற்கான பதிலை இனி தெரிந்து கொள்வோம்.

திஜ்ஸ் வான் டெர் ஹில்ஸ்ட்  என்பவர் தான் இந்த தலையணையை வடிவமைப்பு செய்துள்ளார். இவர்தான் உலகின் மிக விலையுயர்ந்த தலையணையை வடிவமைத்து அதற்கான பெருமையையும் பெற்றுள்ளார். இந்த தலையணை எகிப்திய பருத்தி மற்றும் மல்பெரி பட்டு ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நச்சுத்தன்மையற்ற டச்சு இழைகளால் நிரப்பப்பட்டுள்ளது.

இந்த 'பிரத்தியேக' தலையணையை உருவாக்க ஹில்ஸ்ட் பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் என்பது ஆச்சரியமான தகவல். இந்த தலையணை அதிக விலை கொண்டதாக இருப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்றால், இது 24 காரட் தங்கம், வைரம் மற்றும் சபையர் ஆகிய விலை உயர்ந்த பொருட்களை கொண்டு பதிக்கப்பட்டுள்ளது. இந்த தலையணையின் ஜிப்பில் இணைக்கப்பட்டுள்ள நான்கு வைரங்கள் மற்றும் சபையர் கற்களை தவிர, பின்வருவனவற்றை அடைக்கப் பயன்படுத்தப்படும் பருத்தி ஒரு ரோபோடிக் கிரைண்டிங் இயந்திரத்திலிருந்து வருகிறது.

இந்த தலையணை ஒரு சாதாரண பிளாஸ்டிக் பை அல்லது கவர் கொண்டு வரவில்லை. இவரின் அதிகாரப்பூர்வ கணக்கு மூலம் பகிரப்பட்ட வீடியோவின் படி, இந்த தலையணை ஒரு பிராண்ட் பெட்டியில் பேக்கேஜ் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து திஜ்ஸ் வான் டெர் ஹில்ஸ்ட் கூறியதாவது, தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதியாக உறங்க உதவும் வகையில் இந்த தலையணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த தலையணை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு க்யூரேட் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதை ஆர்டர் செய்த பிறகு, இவர்களின் வடிவமைப்பு குழு 3டி ஸ்கேனரைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் தோள்கள் குறித்தும், தலை மற்றும் கழுத்தின் அளவீடுகளை எடுக்கும். இந்த அளவீட்டு செயல்முறைக்குப் பிறகு, அந்த தலையணையை டச்சு மெமரி இழைகளை கொண்டு நிரப்பப்படுகிறது.

இது உயர் தொழில்நுட்ப ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி தலையின் வடிவத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. இந்த தலையணையை வடிவமைத்து முடிப்பதற்கு முன் நோயாளியின் மேல் உடல் அளவீடு மற்றும் தூங்கும் தோரணையைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப வடிவமைப்பை ஹில்ஸ்ட் உறுதிப்படுத்துவார். இப்படித்தான் இந்த விலை உயர்ந்த தலையணை வடிவமைப்பு செய்யப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்