நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Google sheet ல் உங்களுக்கானக் காலண்டரை உருவாக்க வேண்டுமா.? இதோ முழு விபரம்.!

 Google Sheet | Google sheetயை பல்வேறு அம்சங்களுடன் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், உங்களுக்கான காலண்டரை நீங்களே உருவாக்கி கொள்ள முடியும்.


நாம் என்ன தகவல்களை அறிந்துக்கொள்ள நினைக்கிறமோ? அத்தனையையும் நொடியில் நம்மிடம் கொண்டு வருகிறது கூகுள் (Google). இவை இல்லாமல் எதுவும் இருக்காது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். அதற்கேற்றால் போல் தான், கூகுளும் புதிய புதிய தொழில்நுட்பப் பரிமாணங்களை அறிமுகப்படுத்தி மக்களிடம் பயன்பாட்டிற்குக் கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றான Google sheet குறித்து தான் இன்றைக்கு பார்க்க இருக்கிறோம்..

Google Sheet என்றால் என்ன?

இது ஒரு Google workspace மற்றும் பாதுகாப்பான, கிளவுட் சார்ந்த கூட்டுப்பணியை மேற்கொள்கிறது. மேலும் லேப்டாப், மொபைல்,டேப் போன்ற எந்தவொரு சாதனத்தில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் விரிதாள்களை அதாவது Google sheet யை உருவாக்கலாம். இவை நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களிள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவகையிலும் Google ஆப்களுடன் இந்த சீட் இணைக்கப்பட்டுள்ளது. இவை Google Slidesஸிலும் Docsஆகவும் பயன்படுத்தலாம்.

முக்கியமாக மற்றவர் Google sheet மூலம் உங்களுக்கு அனுப்பும் கருத்துகளுக்கு நேரடியாக ஜிமெயிலில் இருந்தே பதில் அளிக்கும் வசதி உள்ளது. இதோடு நீங்கள் Google meet ல் ஸ்கிரீனை பகிர்தல் அம்சத்தின் மூலமாக கூகுள் சீட்டை நீங்கள் எளிதில் பகிரலாம். இவ்வாறு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளதால் Google Sheet யை பல நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த சீட்டில் உள்ள அனைத்துத் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Sheetகள் பொதுவாக ஒரு அட்டவணை போன்ற வடிவமைப்பில் தரவை ஒழுங்கமைக்கவும் பதிவு செய்ய பயன்படுத்தும் நிலையில் , கூகுள் கருவியில் இருந்து நேரடியாக காலண்டர்களை உருவாக்கவும் அனுமதிக்கின்றன. எப்படி என்பது? குறித்து தற்போது இங்கே அறிந்துக்கொள்வோம்.

1: முதலில் நீங்கள் உங்களது லேப்டாப் அல்லது கம்யூட்டரில் google sheetயை ஓபன் செய்துக்கொள்ளவும்.

2: பின்னர் google sheet ல் File யை கிளிக் செய்ய வேண்டும்.

3: இதனையடுத்து file-ல் new ஆப்சனுக்குள் சென்று From template gallery யைத் தேர்வு செய்யவேண்டும்.

4 : அப்பக்கத்தில் காணப்படும் Annual calendar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5: தற்போது உங்களது திரையில் தோன்றும் Annual calendar ல் உங்களுக்கு கமிட்மென்ட் உள்ள தேதிகளை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.. மேலும் உங்களது காலண்டராக எளிதில் மாற்றம் செய்து கொள்ளலாம்.



மேலும் Google Sheet ல் வலது பக்கத்தில் எழுதப்பட்ட பெரிய ஆண்டை கிளிக் செய்வதன் மூலமும் உங்களுக்குத் தேவையான ஆண்டை மாற்றிக்கொள்ளலாம். மேலும் இதிலிருந்து, பயனர்கள் கொடுக்கப்பட்ட அடைப்புக்குறிக்குள் எந்த குறிப்பிட்ட தேதியையும் மேற்கோள் குறிகளுக்குள் உள்ளிடு செய்துவிட்டு அந்த ஆண்டை நீங்கள் சுலபமாக பெற முடியும்.



ALSO READ : உங்கள் வாழ்வை எளிமையானதாக மாற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதிகளை தவற விடாதீர்கள்.!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!