நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஐரோப்பாவில் வெப்பம்.. ஆண்கள் நைட்டி அணிய யோசனை!

 ஐரோப்பாவில் அதிகரித்து வரும் வெப்பத்தை தவிர்க்க பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவர், கொடுத்த யோசனை சமூகவளைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


ஐரோப்பாவில் தற்போது வெப்பம் பெரிதும் அதிகரித்து வருகிறது. வெப்பத்தால் அங்கு உள்ள டிராபிக் சிக்னல்களும் உருகி வரும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் அந்த வெப்பத்தைத் தணிக்கும் வகையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவர் பதிவிட்ட டுவீட் தற்போது சமூக வளைதள்ங்களில் வைரலாகியுள்ளது.

ஐரோப்பாவில் வெப்பம் அதிகமாகி வருவதால். பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜில் டமாடக், என்பவர், அங்குள்ள ஆண்களை நைட்டி அணிய யோசனை சொல்லியுள்ளார். மேலும், அங்கு நிலவும் வெப்பத்தைத் தணிக்கப் பல யோசனைகளைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, உங்கள் வீட்டு ஜன்னல்களைத் திறந்தே வையுங்கள். எதையும் செய்யாமல் தொலைக்காட்சியைப் பாருங்கள். பின் அனைத்து ஃபேன்களையும் போட்டுவிட்டு ரசியுங்கள். இல்லையென்றால் உங்கள் மருமகன்களை விசிறி விடச் சொல்லுங்கள்.

மதியம் 2 மணிக்கு சோபாவில் படுத்து உறங்குங்கள். குளிர்ந்த தண்ணீரில் நன்றாகக் குளியுங்கள் என அவர் அடுக்கிய யோசனைகள் பலரையும் கவர்ந்துள்ளது.

இவர் எத்தனை யோசனைகள் சொன்னாலும், இவர் சொன்ன முதல் யோசனையைத் தான் நெட்டிசன்கள் பெரிதும் ரசித்து வருகிறார்கள்.

இதற்கு வந்த கம்மெண்ட்ஸ் கூட அனைவரும் ரசிக்கும் படி இருந்தது. “தற்போது நான் அதைத் தான் அணிந்துள்ளேன்” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர், “மிக நல்ல யோசனைகளைச் சொல்லியுள்ளீர்கள்” என கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “நீங்கள் கூறிய யோசனைகளை யாராவது உண்மையிலேயே பின்பற்றப் போகிறார்கள்” என கமெண்ட் செய்துள்ளார்.


ALSO READ : குண்டு துளைக்காத ஐபோன்..உக்ரைன் வீரரின் உயிரைக் காத்த அதிசயம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!