இன்ஸ்டாகிராம் சாட்டிங்கிலேயே ஷாப்பிங் செய்யலாம்: இது கட்டண அம்சம்....
- Get link
- X
- Other Apps
Shop Directly in Chats: இன்ஸ்டாகிராமில் அரட்டையடித்துக் கொண்டே ஷாப்பிங் செய்யும் வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியிருக்கிறது...
- அரட்டையடித்துக் கொண்டே ஷாப்பிங் செய்யுங்க
- மெட்டாவின் புதிய வசதி அறிமுகம்
- இ-காமர்ஸ் சலுகைகளை விரிவுபடுத்தும் மெட்டா .
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, போட்டோ ஷேரிங் அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்களின் ஆர்டரைக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல, சாட்டிங்கில் பொருட்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்க முடியும் என்றும் கூறியுள்ளது. Meta Platforms Inc ஜூலை 18ம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், இன்ஸ்டாகிராம் கட்டண அம்சத்தைப் பெறுகிறது என்று அறிவித்தது, இதன்மூலம், பயனர்கள் சிறு வணிக நிறுவனங்களிலிருந்து நேரடியாக சாட்டிங் மூலம் பொருட்களை வாங்கலாம்.
அதோடு, தேவைப்பட்டால் பயனர்கள் தனிப்பயனாக்கங்களைச் சேர்க்கலாம் மற்றும் சாட்டிங்கிலேயே ஆர்டர் செய்யும் வசதியும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்லது. இ-காமர்ஸ் சலுகைகளை விரிவுபடுத்தும் முயற்சியில், Meta தனது கட்டணச் சேவையான Meta Payஐப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குதல்கள் தொடர்பான பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பொருட்களைத் தேடி வாங்குவதது தொடர்பாக 2020ம் ஆண்டில், ’கடைகளை’ (Shops) அறிமுகப்படுத்தியது தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா.
பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில், தீவிரவாத உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட Meta நிறுவனம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகள் குறித்த தனது ஆண்டு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தனது முதல் ஆண்டு அறிக்கையை வெளியிட்ட பிறகு, சிலிக்கான் வேலி நிறுவனமான மெட்டா, "எங்கள் தரவுக் கொள்கை, எங்கள் சட்ட அமலாக்கப் பதிலளிப்புக் குழு மற்றும் எங்களுடைய ஆக்கப்பூர்வமான விடாமுயற்சி மதிப்பீடுகள் சட்டத்திற்குப் புறம்பான அல்லது அரசாங்கங்கத்தின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிக்கை விளக்குகிறது."
விசில்ப்ளோவர் ஃபிரான்சிஸ் ஹாகன் என்ற மெட்டாவின் (முன்னாள்) ஊழியர் நிறுவனத்தின் உள் ஆவணங்களை கசிய விட்டிருந்தார். அதனால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட சங்கடங்களைத் தொடர்ந்து, மெட்டா தவறான தகவல்களை எதிர்த்துப் போராடவும், உள்ளடக்க மதிப்பீட்டை மேம்படுத்தவும் முயற்சிக்கிறது.
ALSO READ : Fake Loan App: போலி லோன் செயலிகளை கண்டுபிடிக்க வழிகள்.....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment