டீக்கடையில் சாப்பிட்ட அதே சுவையில் கஜடா... இந்த 3 பொருள் மட்டும் இருக்கானு பாருங்க...
- Get link
- X
- Other Apps
இனிப்பு சுவை கொண்ட கஜடா அலாதியான சுவை கொண்டது. அப்படி நீங்களும் இதை விரும்பி சாப்பிடக்கூடியவர் எனில் நினைத்த போதெல்லாம் சாப்பிட வீட்டிலேயே செய்து டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
டீ-க்கடை ஸ்நாக்ஸுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதில் இனிப்பு சுவை கொண்ட கஜடா அலாதியான சுவை கொண்டது. அப்படி நீங்களும் இதை விரும்பி சாப்பிடக்கூடியவர் எனில் நினைத்த போதெல்லாம் சாப்பிட வீட்டிலேயே செய்து டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 4
காய்ச்சியல் பால் - தே.அ
வறுக்க எண்ணெய் - தே.அ
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை :
மைதா மாவை ஒரு அகலமான கிண்ணத்தில் கொட்டிக்கொள்ளுங்கள்.
சர்க்கரை மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது இதை மைதா மாவுடன் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
இப்போது காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ச்சிக்கொள்ளுங்கள்.
எண்ணெய் சூடாகும் வேளையில் மாவை சப்பாத்திக்கு திரட்டுவதுபோல் திரட்டிக்கொள்ளுங்கள், ஆனால் இதில் கொஞ்சம் தடிமனாக திரட்ட வேண்டும்.
பின் சிறு சிறு கட்டங்களாக வருமாறு கோடு போட்டுக்கொள்ளுங்கள்.
எண்ணெய் சூடானதும் சிறு தீயில் வைத்துவிட்டு கட்டம் போட்டு வைத்துள்ள மாவில் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போடுங்கள்.
பின் இரு புறமும் பொன்னிறமாக சிவந்து வர கிளறிவிடுங்கள். நன்கு வெந்ததும் வெளியில் எடுத்துவிடுங்கள்.
நீங்கள் விருப்பப்பட்டால் உருண்டைகளாகவும் போட்டு பொறிக்கலாம்.
அவ்வளவுதான் டீக்கடை கஜடா தயார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment