நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மக்கள் கொரியன் வெப் சீரிஸுகளை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன்..? இந்த 6 விஷயங்கள்தான் காரணம்......

 நெட்ஃபிளிக்ஸ், அமேசான் என பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் அனைத்திலும் கொரிய வெப் சீரிஸ் மற்றும் ஷோக்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்படுவதை நீங்கள் என்றாவது கவனித்தது உண்டா?


நெட்ஃபிளிக்ஸ், அமேசான் என பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் அனைத்திலும் கொரிய வெப் சீரிஸ் மற்றும் ஷோக்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்படுவதை நீங்கள் என்றாவது கவனித்தது உண்டா?. காதல், காமெடி, விறுவிறுப்பான கதைக்களம் காரணமாக கொரிய வெப் தொடர்கள் உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது. வார இறுதி நாட்களில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க பெரும்பாலானோர் கொரியன் நாடகங்கள், வெப் சீரிஸ்களை ஆன்லைன் தளங்களில் அதிகம் தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. அப்படி என்ன தான் இருக்கிறது கொரிய தயாரிப்புகளில், அவை ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன? போன்றவற்றிற்கான காரணங்களை விரிவாக விளக்கியுள்ளோம்.


1. நடிகர்கள் : கொரியன் வெப் தொடர்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்க அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தான் முக்கிய காரணமாக உள்ளனர். ஏனெனில் கொரிய மக்கள் குறைவில்லாத பேரழகுக்கு பெயர் போனவர்கள். ஹேண்ட்சம் ஹீரோக்கள், க்யூட் ஹீரோயின்கள் ஏன் காமெடி நடிகர்கள் கூட ரசிக்க கூடிய வகையில் இருப்பார்கள். கொரியன் டிராமாக்கள் சிறப்பான கதையை மட்டுமல்ல தங்களது கதைக்களத்திற்கு ஏற்ற நடிகர்கள் குழுவை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன.


2.ஃபேஷன் உணர்வு  : கொரியன் வெப் சீரிஸ் மற்றும் நாடகங்கள் என எதுவாக இருந்தாலும் அவை தனித்துவமான ஸ்டைல் மற்றும் ஃபேஷனைக் கொண்டிருக்கும். கொரியர்கள் ஃபேஷன் குறித்து நல்ல ரசனை கொண்டவர்கள் என்பதால், தங்களது ஒவ்வொரு படைப்பிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடை, உடை, பாவனை என அனைத்திலும் வித்தியாசமான ஸ்டைல் மற்றும் ஃபேஷனைக் காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


3. கதைக்களத்தை கலங்கடிக்கும் திருப்பங்கள் : கொரியன் டிராமாக்கள் ஆரம்பத்தில் மிகவும் எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் தொடங்குவது போல் தெரியும், ஆனால் ஒவ்வொரு எபிசோட்டிலும் ரசிகர்களை மிரள வைக்க கூடிய ட்விஸ்ட் அண்ட் ட்ர்ன் விஷயங்களை கொண்டிருக்கும். முக்கியமாக ரொமாண்டிக் டிராமாக்களை விரும்புவோருக்கு கொரியன் வெப் சீரிஸ் அல்லது நாடகங்கள் மனநிறைவை கொடுக்கக்கூடியவையாக இருக்கும்.


4. காமெடி : கொரியன் வெப் சீரிஸ், நாடகங்கள், படங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் சரி, அது காதல், குடும்பம், ஹாரர், ஷாம்பி என எந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் சரி காமெடிக்கு பஞ்சமிருக்காது. கொரியன் படைப்புகளில் எப்படி காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதேபோல் எவ்வளவு சீரியஸான கதைக்களத்திலும் காமெடி மற்றும் வேடிக்கையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.


5. ஈஸியாக புரிந்து கொள்ள முடியும் : கொரியன் வெப் தொடர்கள் வழக்கமாக 30 நிமிடங்களைக் கொண்டவை, 16 முதல் 20 எபிசோட்களில் ஒரு சீசன் நிறைவு பெற்றுவிடும். எனவே இதனை பார்க்க அதிக நேரம் தேவைப்படாது. மேலும் பிற மொழி வெப் சீரிஸைப் போல் அல்லாமல், ஒருமுறை பார்த்தாலே எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருப்பதால் கொரியன் படைப்புகளை கண்டு ரசிக்க உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


6. காட்சிகளில் மிளிரும் கைவண்ணம் : கொரியன் இயக்குநர்களுக்கு பார்வையாளர்களை எப்படி காட்சியோடு கட்டிப்போட வேண்டும் என்பது தெளிவாக தெரிந்துள்ளது. வானுயர்ந்த கார்ப்பரேட் கட்டிடங்களில் தொடங்கி, காடு, மலை, கடல் என கொரியாவின் ஒட்டுமொத்த அழகையும் கண்முன் காட்டிவிடுகின்றனர். இவை கொரியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இருப்பதால், உலக அளவிலான ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!