நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அரிதான பிங்க் நிற வைரம்; விலை எவ்வளவு தெரியுமா?

 கடந்த 300 ஆண்டுகளில் கிடைத்த வைரங்களில் மிகவும் விலை மதிப்புள்ள வைர தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் அதிக விலைக்கு ஏலம் போகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வைர சுரங்களில் அவ்வப்போது அற்புதமான மற்றும் விலைமதிக்கத் தக்க வைரங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அங்கோலாவில் உள்ள வைர சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிங்க் நிற வைரமானது, இதுவரை கிடைத்த வைரங்களிலே மிகவும் விலை உயர்ந்தது என்றும், இந்திய மதிப்பில் சுமார் 550 கோடி ரூபாய் வரை விலை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமெரிக்காவின் அங்கோலாவில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் அரிய வகை பிங்க் நிற வைரத்தை கண்டுபிடித்துள்ளனர். இது 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரியது என ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளி லுகாபா டயமண்ட் கோ தெரிவித்துள்ளார். 170 காரட் உள்ள இந்த பிங்க் வைரம், ‘தி லுலோ ரோஸ்’ என அழைக்கப்படுகிறது.

நாட்டின் வைரங்கள் நிறைந்த வடகிழக்கில் உள்ள லுலோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரம் அங்கோலா அரசுக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. டைமண்ட் முதலீட்டு நிறுவனமான லுகாபா வெளியிட்டுள்ள அறிக்கையில், 300 ஆண்டுகால வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களிலேயே மிகப்பெரியது என குறிப்பிட்டுள்ளது. இயற்கை கற்களின் அரிய மற்றும் தூய்மையான வடிவங்களில் ஒன்றான டைப் IIa வைரத்தின் கண்டுபிடிப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இந்த வைரம் விரைவில் சர்வதேச ஏலம் மூலமாக விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வைரத்தை மதிப்பு கூட்ட அதனை வெட்டி மெருகூட்டப்பட்டால், அதன் மதிப்பில் 50 சதவீதத்தை இழக்கும் என கூறப்படுகிறது. இதேபோல் பல இளஞ்சிவப்பு வைரங்கள் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளன.

அங்கோலாவின் கனிம வள அமைச்சர் டயமன்டினோ அசெவெடோ தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரம் குறித்து கூறுகையில், ”இந்த ஒற்றை வைரத்தால் வைரச் சுரங்கத்தில் அங்கோலா ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்றும், வளர்ந்து வரும் வைர சுரங்கத் தொழிலில் எங்களது அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெகுமதி' எனவும் கூறியுள்ளார்.

59.6 காரட் பிங்க் ஸ்டார் 2017 ஆம் ஆண்டு ஹாங்காங் ஏலத்தில் 71.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இதுவரை விற்கப்பட்ட வைரங்களில் இதுவே மிகவும் விலை உயர்ந்தது ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் வெட்டப்பட்ட, 228.31 காரட் "தி ராக்" அதன் முன்னாள் உரிமையாளர் கார்டியர் நெக்லஸாக அணிந்திருந்தார். இந்த வைரம் மிகவும் அரிதானது என்றும் இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்டது என்பதும், இதுவரை ஏலம் விடப்பட்ட மிகப்பெரிய வெள்ளை வைரம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வைரம் ரூ.145 கோடிக்கு ஏலம் போனது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!