நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா? இந்த பழங்களை அதிகமாக சாப்பிடாமல் இருந்தாலே போதுமாம்......

 பொதுவாக பழங்களில் இருக்கும் அதிக கலோரிகளும் மற்றும் இயற்கையான இனிப்பும் எடை குறைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

நீங்கள் கூடுதல் எடையை குறைக்க வேண்டும் என்றால் பின்வரும் பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  


  • எடை குறைக்கும் முயற்சியில் இருக்கும் பொழுது அவகடோ அடிக்கடி சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். ஏனென்றால் 100 கிராம் அவகேடாவில் 160 கலோரிகள் உள்ளன

  • தேங்காய் எவ்வளவு சத்து நிறைந்ததாக இருந்தாலும் அதிகப்படியாக சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எடை குறைக்கும் விருப்பம் உள்ளவர்கள் கொப்பரை தேங்காய் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

  • வாழைப்பழத்தில் அதிக கலோரிகளும் அதிக சர்க்கரையும் உள்ளன. எனவே எடை குறைக்க முயற்சிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழத்துக்கு மேல் சாப்பிடக்கூடாது.

  • மாம்பழம் மிக அதிகமான கலோரிகளும் இனிப்பும் கொண்ட பழம் ஆகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்களில் முதலில் இருப்பது மாம்பழம். எனவே எடை குறைப்பவர்கள் மாம்பழத்தை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்.

  •  தினமும் சாப்பிட்டு வந்தால் எடை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் உலர் பழங்களில் தண்ணீர் சத்து மிகவும் குறைவு, அதனால் இவற்றில் கலோரிகள் மிக அதிகம். எனவே ஒரு கப் உலர் திராட்சையில் 500 கலோரிகள் இருக்கின்றன அதேபோல ஒரு கப் prunes-ல் 450 கலோரிகள் இருக்கின்றன. எனவே உலர் பழங்கள் சாப்பிடும் போது எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்