நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்கள் வாழ்வை எளிமையானதாக மாற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதிகளை தவற விடாதீர்கள்.!

 Google Assistant | அன்றாடம் நமக்கு தேவையான செய்திகளை வழங்குவது முதல் மளிகை பொருட்களை வாங்குவது குறித்து நினைவூட்டுவது வரை எண்ணற்ற சேவைகளை கூகுள் அசிஸ்டெண்ட் வழங்குகிறது.


நம் கைகளில் தவழும் ஆண்டிராய்ட் மொபைல்களில் பல்வேறு தகவல்களை விரல் நுனியில் கொட்டித் தருகின்ற, ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் கொண்டது தான் கூகுள் அசிஸ்டெண்ட் ஆகும். நம்முடைய அன்றாட வாழ்க்கையை இது எளிமையாக, சாதாரணமாக மாற்றக் கூடியது ஆகும்.

அன்றாடம் நமக்கு தேவையான செய்திகளை வழங்குவது முதல் மளிகை பொருட்களை வாங்குவது குறித்து நினைவூட்டுவது வரை எண்ணற்ற சேவைகளை கூகுள் அசிஸ்டெண்ட் வழங்குகிறது.

கூகுள் அசிஸ்டெண்டை நீங்கள் ‘ஹே கூகுள்’ என்று அழைத்தால் போதும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்யும். இந்த ஹே கூகுள் என்பதை கூட உங்கள் விருப்பப்படி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். கூகுள் அசிஸ்டெண்ட் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்றால் நிறைய விஷயங்களை நீங்கள் தவற விடுகிறீர்கள் என்று பொருள்.

அன்றாட செய்திகளை வழங்குகிறது

உங்களை சுற்றியிலும் என்ன நடக்கிறது என்ற தகவல்களை நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். உங்கள் நாடு அல்லது இந்த உலகம் என எங்கு நடக்கும் நிகழ்வுகள் என்றாலும் கூட, அதுகுறித்து உங்களுக்கு படிக்க நேரமில்லை என்றால் கூகுள் அசிஸ்டெண்ட் மூலமாக தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக நீங்கள் குட் மார்னிங் சொன்னால் போதும். உலகில் என்னென்ன நடைபெற்றுள்ளது என்ற விவரங்களை கூகுள் அசிஸ்டெண்ட் பட்டியல் போட்டு சொல்லிவிடும்.


பயணத்திற்கான வழித்தடங்கள்

விர்ச்சுவல் வசதி கொண்ட கூகுள் அசிஸ்டெண்ட் டிவைஸில் ஜிபிஎஸ் வசதியும் இயங்குகிறது. நீங்கள் சென்று சேருவதற்கான இடத்திற்கு மிக சிறப்பான வழித்தடத்தை இது காண்பிக்கிறது. நேவிகேஷனுக்கான வாய்ஸ் கமாண்ட் ஆன் செய்து விட்டு, விரைவான மற்றும் சுலபமான வழியில் நீங்கள் பயணிக்க முடியும்.

அலாரம் வைப்பது

தினசரி அலாரம் வைத்துக் கொள்ளும் வசதியும் கூகுள் அசிஸ்டெண்ட் டிவைசில் இருக்கிறது. நம் அன்றாட திட்டமிடல்களை பின்பற்றுவதற்கு இது உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் நேரத்தை நீங்கள் குறிப்பிட்டு விட்டால், நமக்கு தூக்கத்தை வர வழைக்கும் வகையில் ரிலாக்ஸான மியூஸிக்கை இது ஒலிக்கும். அதேபோன்று காலையில் நம்மை புத்துணர்ச்சியுடன் எழுப்பி வைக்கும்.


ரிமைண்டர் வைத்துக் கொள்வது

மிக முக்கியமான விஷயங்கள் அல்லது நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுவதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் உதவியாக இருக்கும். எந்த நாளில், எந்த நேரத்தில் எங்கு சென்று நிகழ்ச்சியில் அல்லது விழாவில் பங்கேற்கப் போகிறோம் என்பதை நீங்கள் செட் செய்து விட்டால், அதுகுறித்து உங்களுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் நினைவூட்டும். இதேபோன்று ஒவ்வொரு வார இறுதியிலும் உங்களுக்கு மளிகை பொருள் வாங்க வேண்டும் என்பதை கூட இது நினைவூட்டி சொல்லும். அது சரியான நேரத்தில் நினைவூட்டும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்