நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பூசணிக்காய் கட்லெட் .....

 பூசணிக்காயைக் கொண்டு காரம் மற்றும் இனிப்பு என பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும். அந்த வகையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டியான ‘பூசணிக்காய் கட்லெட்’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.


பூசணிக்காய், முதன்முதலாக மத்திய அமெரிக்காவில் ஏழாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு பயிரிடப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. 

சத்துக்கள் நிறைந்த பூசணியில், கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது. பூசணிக்காயைக் கொண்டு காரம் மற்றும் இனிப்பு என பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும்.

 அந்த வகையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டியான 'பூசணிக்காய் கட்லெட்' எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.


 தேவையான பொருட்கள்: 


பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம் 

உருளைக்கிழங்கு - 1

 சோளமாவு - 2 தேக்கரண்டி

 அரிசி மாவு - 2 தேக்கரண்டி 

மிளகு தூள் - 1 

கறி மசாலாத்தூள் - 1

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 2 

எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி 

ரொட்டித்தூள் - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 


செய்முறை:

 துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும்.

 வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். 

உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும்.

 பின்னர் ஒரு பாத்திரத்தில் குளிரவைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

 இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக்கொள்ளவும். பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

 அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

 இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார். இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.



ALSO READ : இட்லி, தோசை இல்லாத சத்தான காலை உணவாக இதை சாப்பிடுங்கள்........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!