பல் துலக்கும் முன் தண்ணீர் குடிக்கலாமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
- Get link
- X
- Other Apps
நீர், ஒருவருக்கு நீரேற்றமாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். நீர், ஒருவருக்கு நீரேற்றமாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. சிறுநீரகங்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது, உமிழ்நீரை உருவாக்குவது மற்றும் பல்வேறு உடல் பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கச் செய்வது போன்ற உடல் செயல்பாடுகளை பராமரிக்கிறது.
ஒருவர் காலையில் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:
ஒருவர் தூங்கும்போது வாயில் பாக்டீரியாக்கள் உருவாகின்றன; நீங்கள் காலையில் தண்ணீர் குடிக்கும்போது, அந்த பாக்டீரியாக்களையும் சேர்த்து உட்கொள்கிறீர்கள், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, அஜீரணத்தை தடுக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது வாய் துர்நாற்றத்தைக் குறைப்பதன் மூலம் வாய் ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைக்கிறது,
வாயில் உமிழ்நீர் இல்லாததால் ஏற்படும் வாய் வறண்டு போவதை தடுக்கவும் தண்ணீர் மீண்டும் நீரேற்றம் செய்யவும் உதவுகிறது.
ஃபிட்னெஸ் நிபுணர் சோனியா பக்ஷியும், எழுந்தவுடன் குறைந்தது ஒரு கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இது நோய்களை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
என்ன வகையான தண்ணீர் அருந்த வேண்டும்?
வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். “எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கவும், ”என்று டாக்டர் ரோத்தகி கூறினார்.
ALSO READ : Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment