நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்க வேண்டுமா? இதோ சில எளிய டிப்ஸ்!

 சரும பிரச்சனைகளில் உங்கள் அழகை சீர்குலைக்கும் முக்கிய பிரச்சனை முகப்பரு.

இந்த பிரச்சனையை பெரும்பாலான மக்கள் சந்திக்கின்றனர். முகப்பரு என்பது இளம் வயதினரிடையே பொதுவானது.

இருப்பினும் இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது. முகப்பரு வந்தால் முகத்தில் அழகையே கெடுத்து விடுகின்றது.

இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அந்தவகையில் முகப்பருவை ஓரே இரவில் போக்க கூடிய சில எளிய டிப்ஸ்களை இங்கே பார்ப்போம்.    


  • வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

  • முகப்பரு உள்ள இடத்தில் டூத்பேஸ்ட்டை நேரடியாக அப்ளை செய்யுங்கள். பேஸ்ட் அப்ளை செய்யும் முன் ஐஸ் கட்டிகளை பருக்களில் வைத்து தேய்த்த பிறகு அப்ளை செய்யுங்கள். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் மற்றும் நீரை உறிஞ்சி கூடுதலான எண்ணெய்யையும் உள்ளிழுத்துக் கொள்ளும். பருக்களும் நீங்கும்.  

  • பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

  • எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள். பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.

  •  இரவு தூங்கும்முன், பருக்கள் உள்ள இடத்தில் இதைத் தடவி காலை எழுந்து பார்த்தால் உங்களாலேயே நம்ப முடியாது. அந்த அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

  • கிரீன் டீ பேகை தண்ணீரில் நனைத்து அல்லது ஃபிரிஜ் ஃப்ரீசரில் பேகை வைத்து பருக்கள் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் நீங்கும்.

  • புதினாவை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்.

  •  எண்ணெயில் பஞ்சை நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தி எடுத்து 15 - 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

  • பேக்கிங் சோடாவை பருக்கள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ பருக்கள் நீங்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்