டிவியுடன் கூடிய கூகுள் குரோம்காஸ்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு பிக்சல் 5 தொடருடன் சேர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது.
யூடியூப் வீடியோவை டிவியில் பார்க்க வேண்டுமா? இன்டர்நெட் வேண்டுமா? உங்கள் மொபைல், லேப்டாப்பில் தோன்றுபவற்றை டிவியில் பெரிய திரையில் உடனுக்குடன் காண வேண்டுமா? மொபைல் அல்லது லேப்டாப்பை உங்கள் டிவி உடன் இணைக்க வயர்களை தேடுகிறீர்களா? அது இனிமேல் தேவையில்லை.
கூகுளின் குரோம்காஸ்ட் (Google Chromecast) இதனை மிகவும் எளிமையாக்கியுள்ளது. உங்கள் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றக் கூடிய சாதனம் தான் இது. சாதாரண DATA CARD DONGLE போன்று சிறிய அளவில் இருக்கும் இந்த சாதனத்தை உங்கள் டிவி HDMI போர்ட்டில் பொருத்தினால் போதும். சில நிமிடங்களில் உங்கள் டிவி, யூடியூப் வீடியோ, இணையம், மொபைலில் / கம்ப்யூட்டரில் உள்ள படங்களை உங்களுக்கு காட்ட தயாராகி விடும்.
டிவியுடன் கூடிய கூகுள் குரோம்காஸ்ட் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் நிச்சயமாக இது வெளியாகும் தேதி வெகு தொலைவில் இல்லை. தற்போது இந்த சாதனம் FLIPKART போன்ற ஆன்லைன் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. கூடவே இதன் விலை குறித்த தகவலும் உள்ளது.
இதன் காரணமாகவே, இந்த சாதனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.6,399. இதில் காட்டப்பட்டுள்ளது 4K resolution கொண்ட மாடல் ஆகும். பிளிப்கார்ட்டில் இந்த மாடல் ‘விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைக்கு வெள்ளை நிறத்தில் மட்டுமே இந்த சாதனம் கிடைக்கும்.
டிவியுடன் கூடிய கூகுள் குரோம்காஸ்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு பிக்சல் 5 தொடருடன் சேர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. ஆனால் அது இந்தியாவிற்கு வரவே இல்லை. இதற்கு கூகுள் எந்த விளக்கமும் கூறவில்லை. இந்த நிலையில்தான், கடந்த மாதம், கூகுள் நிறுவனம், டிவியுடன் கூடிய கூகுள் குரோம்காஸ்ட் இந்தியா உட்பட மேலும் 12 நாடுகளில் கிடைக்கும் என தெரிவித்தது.
ஒரு நாட்டில் தனது புதிய தயாரிப்பைத் தொடங்குவதற்கு முன், அந்த தயாரிப்பின் அம்சங்களை உள்ளூர் மயமாக்குவதில் கூகுள் கவனம் செலுத்துகிறது. (உதாரணம் இப்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் google translate வசதி). இந்தியா போன்ற, பல மொழிகள் பேசப்படும் நாட்டில், அனைத்து மொழிகளையும் ஒரு சாதனத்தில் ஒருங்கிணைப்பது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். இது கூகுள் போன்ற உலகின் பெரு நிறுவனங்களுக்கே சவால்களை ஏற்படுத்துகிறது.
இந்த Chromecast உங்களுக்கு 4K HDR தரமான வீடியோக்களை வினாடிக்கு 60 ஃப்ரேம்களில் மிகவும் துல்லியமாக வழங்குகிறது. மேலும், உங்கள் பார்வை அனுபவத்தை மேம்படுத்த டால்பி விஷனையும் ஆதரிக்கிறது. நெட்ஃபிக்ஸ் மற்றும் யூடியூப்பிற்கான பிரத்யேக பட்டன்கள் கொண்ட Chromecast ரிமோட்டை கிட்டத்தட்ட கூகுள் மீண்டும் உருவாகியுள்ளது.
கூகுள் டிவி என்பது பெரிய திரைகளுக்கான ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தின் மறு பதிப்பாகும். இது மிகவும் எளிமையான UI (இயங்குதளம்)ஆகும். Chromecast என்பது வழக்கமாக செல்போனில் இருப்பதை பிரதி செய்யும் ஒரு வகை Casting சாதனமாகவே இதுவரை இருந்து வந்தது. ஆனால் இந்த வெர்ஷன் சந்தையில் கிடைக்கும் ஸ்ட்ரீமிங் சாதனங்களைப் போலவே உள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்ட விலையில் கூகுள் Chromecast டிவி 4K பதிப்பு அறிமுகமானால், அது தற்போது இந்தியாவில் சந்தியில் உள்ள Amazon Fire TV Stick 4K Max மாடலுடன் போட்டியிடும் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment