சுவையான சுறா புட்டு செய்வது எப்படி?
- Get link
 - X
 - Other Apps
 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு சுறா புட்டு. அடிக்கடி உணவில் சேர்த்துகொள்வதால் உடலுக்கு நன்மை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 4
பூண்டு - 20 பல் பெரியது
இஞ்சி - 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - ½ ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - ½ ஸ்பூன்
முதலில் பொடி பொடியாக வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை நறுக்கிகொள்ளவும்.
அடுத்து, சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
பின், சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும். தொடர்ந்து, மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்துவிடவும்.
அடுத்ததாக, வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
இத்தோடு, சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.
ALSO READ : அரிசி மாவு புட்டு ஆவி பரக்க சுடச் சுட ஈசியா செய்யலாம்! எப்படி தெரியுமா?
- Get link
 - X
 - Other Apps
 





Comments
Post a Comment