நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்....

 பொதுவாக மாசு மருவற்ற ஜொலி ஜொலிக்கும் சருமம் வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது.

அப்படி பிரகாசமான சருமத்தை பெற வேண்டும் என்றால் ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றை மறக்காமல் கடைப்பிடித்து வந்தாலே போதும்.

அந்தவகையில் சருமத்தை கண்ணாடி போன்ற ஜொலிக்க கூடிய சில அழகு குறிப்புக்களை பற்றி இங்கே பார்ப்போம்.   


  • அரிசியை கொதிக்க வைத்து, வடிகட்டிய பின் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். பின்னர் 2 முதல் 3 நாட்கள் தண்ணீரை நொதிக்க வைக்கவும். நொதித்த பிறகு, அது பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகின்றது. 

  • தேனை ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் தடவி குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும்.இது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், நீண்ட நேரம் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.

  • வைட்டமின் காப்ஸ்யூல்களை நீங்கள் உட்கொள்ளலாம் அல்லது சீரம் நேரடியாக தோலில் தடவலாம். குளிர்ந்த நீரில் சுத்தம் செய்த பிறகு தினமும் காலையில் சீரம் தடவினால், சருமம் இறுக்கமடைவதோடு, கூடுதல் பளபளப்புடன் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

குறிப்பு 


மேக்கப், சீரம், மாய்ஸ்சரைசர் போன்றவற்றை தோல் பராமரிப்பு முறையுடன் பயன்படுத்துதல் போன்ற கண்ணாடி போன்ற சருமத்தைப் பெறலாம்.

உங்கள் சருமமும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். தண்ணீர் உட்கொள்வது உங்கள் சருமத்திற்கு அவசியம்.


ALSO READ : உடல் எடையை குறைக்க கொரியன்ஸ் பின்பற்றும் விநோத பழக்கம்.....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!