குண்டு துளைக்காத ஐபோன்..உக்ரைன் வீரரின் உயிரைக் காத்த அதிசயம்!
- Get link
 - X
 - Other Apps
 
உக்ரைன் இராணுவ வீரரைத் தாக்க வந்த தோட்டா அவர் பயன்படுத்தி வந்த ஐபோனில் சிக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உலகில் உள்ள நாடுகள் உற்று நோக்கும் விஷயமாக ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளது. பல நாட்கள் ஆகியும் இந்த போர் இன்னும் முடிவுபெறாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் உள்துறை அமைச்சக ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ, நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில் உக்ரைன் இராணுவ வீரரைத் தாக்க வந்த தோட்டா அவர் பயன்படுத்தி வந்த ஐபோனில் சிக்கியுள்ளது. இதனால் அவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இதைப் பகிர்ந்து அவர், “நம் வீரரின் உயிரை ஒரு ஐபோன் காப்பாற்றியுள்ளது” என எழுதியுள்ளார். பலரும் அதிகமாக ஷேர் செய்து வரும் இந்த வீடியோவை இதுவரை 2 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோவிற்கு ஒரு பார்வையாளர், “ஐபோனை நான் வாங்குவதற்கு எனக்கு மேலும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது” என எழுதியுள்ளார். மற்றொருவர், “ஐபோன் தோட்டவை நன்றாகத் தாங்குகிறது, ஆனால் கீழே போட்டால் தான் உடைகிறது” என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “இதைத் தயாரிக்கும் பொருட்களை வைத்து ஏன் காவலர்களுக்கு புல்லட் புரூப் பொருட்களைத் தயாரிக்கக் கூடாது” எனக் கேட்டுள்ளார்.
ALSO READ : பலரை குழப்பிய புகைப்படம்... இந்த திருமண உடையில் மறைந்திருக்கும் உருவம் என்ன தெரியுமா.?
- Get link
 - X
 - Other Apps
 

Comments
Post a Comment