நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாய் துர்நாற்றத்தால் அவஸ்தையா? இதனை போக்க இதோ சில எளிய இயற்கை வழிகள்.....

 பொதுவாக பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம்.

வாய் அடிக்கடி வறண்டு போவது `க்சீரோஸ்டோமியா’ (Xerostomia) என்று அழைக்கப்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும்.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது அதில் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவை வாய் வறண்டு போவதற்கான முக்கிய காரணங்களாகும். இந்தப் பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

ஆனால், தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் முடியும். அந்தவகையில் வாய்துர்நாற்ற பிரச்சினையை சரி செய்ய என்ன மாதிரியான இயற்கை வழிகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.


  • ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.

  • சில துளிகள் பெப்பர் மிண்ட் ஆயிலை எடுத்து ஈறுகளில் தடவினால், ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

  • இலவங்கப்பட்டையின் பொடியை சிறதளவு எடுத்துக் கொண்டு அதனை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து ஈறுகளின் மீது தடவி 2 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி விட வேண்டும்.

  • தினமும் காலையில் பல்துலக்குவதற்கு முன்பாக அரை டீஸ்பூன் அளவு சிசேம் ஆயில், தேங்காய் எண்ணெய், சில துளிகள் டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 10 நிமிடங்கள் நன்றாக வாய்கொப்பளித்து துப்பி விட வேண்டும்.

  • புதினா இலையை காய வைத்து சம அளவு உப்பு சேர்த்து தூளாக்கி காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் குறையும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

  • வேப்பங்குச்சியில் பல் துலக்கினால் பற்களில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.

  • வெந்தயக்கீரையை ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரில் வாய்க்கொப்பளித்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

  • அசோக மரப்பட்டையை தூளாக்கி அதனுடன் உப்பு சேர்த்து அந்த தூளைக் கொண்டு பல் துலக்கினால், பல் வலியை குறைக்கலாம்.

  • ஆலமரப்பட்டையில் கசாயம் செய்து, அதை கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

  • கொய்யா இலையை தூள் செய்து அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வைத்து, இந்த பொடியை கொண்டு பல் துலக்கினால் வாய் துற்நாற்றம், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

  • எலுமிச்சையின் தோலை தூக்கி எறியாமல் அதனை நன்றாக வெயிலில் காய வைத்து தூள் செய்து அதனை கொண்டு பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று மின்னும்.

  • ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் சிறிதளவு உப்பை போட்டு ஒரு நாளில் ஒரு சில முறைகள் வாய் கொப்பளித்தால், இந்த ஈறுகளில் இரத்தம் வடிதலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

  • வாய் கொப்பளிக்கும் நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

  • வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.

  • அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.   




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்