தனது மூக்கை பயன்படுத்தி நிலக்கடலையை மலையில் தள்ளி சாதனை படைத்த வினோத மனிதர்.!
- Get link
- X
- Other Apps
சமீபத்தில் 53 வயதான பாப் சலேம் என்பவர் நிலக்கடலையை மூக்கைப் பயன்படுத்தி மலையின் மீது தள்ளி வினோத சாதனை படைத்துள்ளார்.
நம்மை சுற்றி நடக்கிற சில விஷயங்கள் நமது கண்களால் நம்ப முடியாத அளவிற்கு மிக வினோதமானதாக இருக்கும். இப்படிப்பட்ட சாதனைகளை செய்ய கூடிய மனிதர்கள் இந்த பூமியில் குறைந்த அளவிலேயே உள்ளனர். இப்படியொரு வினோத மனிதரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அமெரிக்காவை சேர்ந்த 53 வயது முதியவர் ஒருவர் செய்த சாதனையை தான் இன்று நெட்டிசன்கள் வாய் பிளந்து பார்க்கின்றனர். ஆம், இவர் தனது மூக்கைப் பயன்படுத்தி நிலக்கடலையை மலையில் தள்ளி சாதனை படைத்துள்ளார். இதை படிக்கும் எல்லோருக்கும் வேடிக்கையான சாதனையாக உள்ளது என்று யோசிக்க தோன்றும்.
இதற்கு முன்பு, இந்த சாதனையை 93 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு நபர் தனது மூக்கின் மூலம் வேர்க்கடலையை பைக்ஸ் பீக் என்கிற உயர்ந்த மலையின் மேலே இருந்து தள்ளி சாதனை படைத்து இருந்தார். இதே போன்று, சமீபத்தில் 53 வயதான பாப் சலேம் என்பவர் நிலக்கடலையை மூக்கைப் பயன்படுத்தி மலையின் மீது தள்ளி வினோத சாதனை படைத்துள்ளார். கொலராடோவைச் சேர்ந்த இந்த நபர், 21ஆம் நூற்றாண்டில் மூக்கை பயன்படுத்தி பைக்ஸ் பீக் மலையில் இருந்து வேர்க்கடலையை தள்ளி சாதனை படைத்த முதல் நபர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.
மனிடூ ஸ்பிரிங்ஸ் அரசாங்கத்தால் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஜூலை 9 அன்று தொடங்கிய பாப் சலேம் அவர்களின் முயற்சிகளின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. அவர் இந்த சாதனையை முடிக்க கிட்டத்தட்ட ஏழு நாட்கள் எடுத்து கொண்டுள்ளார். இந்த சாதனையை செய்ய மற்றவர்கள் மிகவும் உற்சாகத்துடன் ஊக்கம் தந்தனர். இந்த சாதனையை குறித்து சலேம் பேசும்போது “மானிடூ ஸ்பிரிங்ஸ் போன்ற நகரம் வேறெங்கும் இல்லை. மனிடூ ஸ்பிரிங்ஸின் 150-வது கொண்டாட்டத்தைக் கொண்டாடும் வகையில் இந்த வரலாற்றைக் கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பைக்ஸ் பீக் மலை பகுதி பிரதிநிதித்துவப்படுத்தும் செழுமையான வரலாற்றைப் பார்வையிடவும் அதில் ஈடுபடவும் அனைவரும் நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் நான் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற விரும்ப மாட்டீர்கள். ” என்று கூறி தனது உணர்ச்சி வயம் நிறைந்த உரையை தந்தார். இந்த வீடியோவை சுமார் 9,000 பேர் பார்த்துள்ளனர். மேலும் பலர் தங்களது கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் "இது நம்ப முடியாத சாதனை" என்று கூறியுள்ளார்.
மேலும் ஒருவர் "சிறப்பான சாதனையை இவர் செய்துள்ளார்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த சாதனையை போன்றே இந்த மாத தொடக்கத்தில் இத்தாலியை சேர்ந்த ஒருவர் உலகின் மிகப்பெரிய பெப்சி கேன்களை சேகரித்து கின்னஸ் உலக சாதனையை படைத்தார். இந்த கேன்களின் சேகரிப்பு பயணத்தில் சூப்பர் எடிஷன் வகை கேன்களும் உள்ளது.
ALSO READ : பலரை குழப்பிய புகைப்படம்... இந்த திருமண உடையில் மறைந்திருக்கும் உருவம் என்ன தெரியுமா.?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment