ஹோட்டலுக்கு வந்த பார்சலில் இருந்த அரிய வகை லாப்ஸ்டர் - திகைத்துப்போன ஊழியர்கள்;
- Get link
- X
- Other Apps
அரிய வகை லாப்ஸ்டர் என்று தவறுதலாக ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதனை கண்ட ஊழியர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.
கடல் உணவுகளில் பெரும்பாலானோரின் விருப்பம் உள்ள உணவாக இருப்பது லாப்ஸ்டர். கடலின் தரைப் பகுதியில் வசிக்கும் இந்த வகை உயிரினங்கள், நண்டுகளை போலவே, கால்களை கொண்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த உணவகத்துக்கு அனுப்பப்பட்ட பார்சலில் மிகவும் அரியவகை ஆரஞ்சு நிற லாப்ஸ்டர் இருந்திருக்கிறது. இது அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை திகைக்க வைத்திருக்கிறது.
இங்கு சமைப்பதற்காக கடலில் பிடிக்கப்பட்ட லாப்ஸ்டர்கள் டெலிவரி செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டலுக்கு பார்சல் ஒன்று வந்திருக்கிறது.
அதில், இருந்த ஆரஞ்சு நிற லாப்ஸ்டரை ஊழியர்கள் பார்த்ததும், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனை ஆய்வு செய்த ஹோட்டல் நிர்வாகிகள், உடனடியாக இதனை பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மிர்டில் கடற்கரையில் அமைந்துள்ள அக்வேரியத்துக்கு இந்த அரியவகை லாப்ஸ்டர் அனுப்பப்பட்டிருக்கிறது. ஏனென்றால் ரெட் லாப்ஸ்டர் உணவகம் இங்கு பரிமாறப்படும் செட்டர் பிஸ்கட்களுக்கு பெயர்போனது.
இந்த அரியவகை லாப்ஸ்டருக்கு செட்டர் என பெயரிட்டு உள்ளனர் ஹோட்டல் நிர்வாகிகள். கடந்த வாரம் இந்த லாப்ஸ்டர், அக்வேரியத்துக்கு அனுப்பப்பட்டது.
மேலும், இந்த லாப்ஸ்டர் 30 மில்லியன்களில் ஒன்று என்கிறது இந்த உணவகம். இந்த வகை லாப்ஸ்டர் அசாதாரணமானது எனவும் கடலில் வேட்டையாடும் விலங்குகளின் கவனத்தை இந்த லாப்ஸ்டர் ஈர்க்கிறது என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ALSO READ : கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம் - இதன் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment