ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்னையா? போட்டோ எடுக்க முடியலையா? இதை செய்து பாருங்க!
- Get link
- X
- Other Apps
ஆண்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ஸ்டோரேஜ் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். இதனால் ஃபோனில் உள்ள மற்ற செயலிகளும் மெதுவாக வேலை செய்கிறது. மற்ற தகவல்கள், போட்டோ எடுக்க முடியாமல் போகிறது. இதை சரி செய்ய சில வழிகள் இருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
கேட்சி ஃபைல்ஸ் என்றால் என்ன?
நமக்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் கூகுளில் தான் தேடுகிறோம். நாம் இணையத்தில் தேடும் தகவல்கள், வலைதளங்களின் முகவரி ஆகியவைகள் ஸ்மார்ட்ஃபோனில் பதிவாகும். அதுவே கேட்சி பைல்ஸ் (Cache)ஆகும். நீங்கள் பயன்படுத்தும் வலைதளங்களங்களின் தகவல்களை தற்காலிகமாக சேமித்து வைக்கும். இதனாலும் உங்கள் ஸ்டோரேஸ் நிரம்பலாம்.
இது எதற்காக சேமிக்கப்படுகிறது என்றால், நீங்கள் அடுத்த முறை தகவல்களை தேடும் போது அதை விரைவாக கொடுப்பதற்கு உதவுகிறது. இதனால் பிரவுசரில் தேடிய அனைத்து தகவல்களும் ஸ்டோரேஜில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்கிறது. ஃபோன் செயலிகளின் செயல்பாடும் மெதுவாகிறது. லோடு ஆவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. கேட்சி ஃபைலை அழித்துவிட்டால் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.
கேட்சி ஃபைல்ஸ் டெலிட் செய்வது எப்படி?
எல்லா செயலிகளும் கேட்சி பயன்படுத்தினாலும், சமூக வலைதளங்கள் அதிகப்படியான கேட்சி ஃபைல்ஸ் சேமிக்கப்படுகிறது. க்ளியர் கேட்சி செய்ய முதலில்,
- ஃபோனின் செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று ஆப்ஸ் அண்ட் னோட்டிபிக்கேஷன்ஸ் செல்ல வேண்டும்.
- ஆப்ஸ் அண்ட் னோட்டிபிக்கேஷன்னில் அனைத்து ஆப்களையும் செலக்ட் செய்ய வேண்டும்.
- பின்பு, ஸ்டோரேஜ் அண்ட் கேட்சிக்கு சென்று க்ளியர் கேட்சி கொடுக்க வேண்டும்.
பிரவுசர் கேட்சி க்ளியர் செய்வது?
- ஃபோனில் குரோம் வெப் பிரவுசருக்கு செல்ல வேண்டும்.
- அதில் சென்று, History ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
3.History ஆப்ஷனில் கிளியர் பிரவுசிங் டேட்டாவிற்குள் சென்று, பாஸ்வேர்ட் ஆப்ஷனை தவிர்த்து மற்ற அனைத்தையும் செலக்ட் செய்து கிளியர் டேட்டா பட்டன் கொடுக்க வேண்டும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment