கைகளில் உள்ள சதையை குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய பயிற்சிகள்.....
- Get link
- X
- Other Apps
நமது உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சீராக வைத்துக் கொள்வதற்கென்று தனித்தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது.
இதிலும் இன்றைக்கு பலரும் கைகளில் இருக்கும் தசையை குறைக்க முடியாமல் அவஸ்தைப்படுவதுண்டு. இவற்றை கரைக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றினாலே போதும்.
பயிற்சி: 1
கால்களை சற்று அகல விரித்து நில்லுங்கள். இப்போது இரண்டு கைகளையும் உங்கள் முன்னால் நீட்ட வேண்டும். ஒரு முறை பக்கவாட்டில் அங்கிருந்து ஆரம்பித்து உங்கள் முன்னால் நீட்ட வேண்டும்.
உங்களுக்கு நேராக கைகளை கொண்டு வரும் போது கைகள் மேலும் கீழுமாக கடந்து செல்ல வேண்டும். அதாவது கத்திரிக்கோல் போல. அதாவது கைகளை எக்ஸ் வடிவத்தில் கொண்டு வந்து மீண்டும் பக்கவாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். கைகளை நன்றாக கொண்டு செல்ல பழகி விட்டால் கால்களையும் கொண்டு செல்லலாம்.
பயிற்சி: 2
standing arm circles பயிற்சி. இந்த பயிற்சி செய்வதற்கு முதலில் நேராக எழுந்து நிக்க வேண்டும். பிறகு தங்கள் கால்களை சற்று விரித்து வைக்க வேண்டும்.
பின் தங்களுடைய இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நோக்கி தூக்க வேண்டும். பின் கீழ் நோக்கி இடுப்பு கீழ் இறக்க வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்துவர வேண்டும்.
பயிற்சி: 3
wall push ups. இந்த பயிற்சி வழக்கமான புஷ் அப் போலத்தான் இருக்கும். ஆனால் இந்த பயிற்சியை சுவற்றில் செய்ய வேண்டும்.
அதாவது தங்களுடைய இருகைகளையும் நேராக நீட்டி சுவற்றில் உள்ளங்கை படும் படி வைக்க வேண்டும்.
இப்பொழுது தங்கள் கைகளை அழுத்தி புஷ் அப் செய்திடுங்கள், அதாவது சாதாரணமாக சுவற்றில் தங்கள் கைகளை ஊன்றி புஷ் அப் செய்ய வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் மிக விரைவில் தங்கள் கைகளில் உள்ள சதைகள் குறைய ஆரம்பிக்கும்.
பயிற்சி: 4
நேராக நிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் இரண்டு பாதங்களுக்கு நடுவில் சின்ன இடைவேளி இருக்கட்டும்.
இரண்டு கைகளையும் அகல விரித்து இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் ரொடேட் செய்ய வேண்டும்.
அப்படி ரொடேட் செய்யும் போது உள்ளங்கை கீழ் நோக்கியிருக்க வேண்டும். முதல் 20 ரவுண்ட் ஒரு பக்கமும் அடுத்த 20 ரவுண்ட் அதற்கு ஆப்போசிட் சைட் செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர தங்கள் கைகளில் உள்ள சதைகள் குறைய ஆரம்பிக்கும்.
பயிற்சி: 5
நம் உடலை பிளாங்க் செய்வதற்கான தோற்றத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் இரு உள்ளங்கைகளையும் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
கால்களின் நுனி விரலையும் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மலை ஏற்றத்தை போன்று தோற்றத்தில் நாம் நின்று கொள்ள வேண்டும். நம்முடைய வயிறு உடலில் உள்ள வேறு எந்த பகுதியும் தரையில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இருகாலும் உள்ளங்கை மட்டுமே தரையில் இருக்க வேண்டும். நேராக இருப்பது மிகவும் அவசியம். கையை மடக்க கூடாது. காலையும் மடக்க கூடாது. இப்படி முடிந்தவரை அதிகபட்சமாக ஒரு 30 நொடிகள் வரை செய்ய வேண்டும்.
also read : நீண்ட நேரம் இரவில் கண் விழிப்பவரா நீங்கள்? - அப்போ அவசியம் இதை தெரிந்து கொள்ளுங்கள்....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment