நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காப்பர் தண்ணீர் குடிக்கலாமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது.......

 எடை இழப்புக்கு உதவுவது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை – காப்பர் நீரின் பல நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள் .


முழுமையான நல்வாழ்வைப் பேணுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது இன்றியமையாதது. பொதுவாக அறியப்பட்டபடி, உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனது, சாதாரண உடல் வெப்பநிலையை பராமரிக்கவும், முதுகுத் தண்டு மற்றும் பிற திசுக்களைப் பாதுகாக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் தொடர்ந்து தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமானது.

ஆனால் காப்பர் பாத்திரங்களில் சேமிக்கப்படும் நீரிலிருந்து அதிக ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி காப்பர் நீரை ஏன் குடிக்கத் தொடங்க வேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்களைப் பகிர்ந்துள்ளார். பாருங்கள்.

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

பலர் தங்கள் உணவில் போதுமான அளவு தாமிரம் சேர்ப்பதில்லை, இது தைராய்டு சுரப்பிகளின் செயலிழப்பு காரணமாக, தைராய்டு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. காப்பர் நீர் தைராய்டு சுரப்பியின் செயல்திறனை சமன் செய்கிறது.

வீக்கத்தை குணப்படுத்துகிறது

கீல்வாதம் அல்லது மூட்டு பிரச்சினைகள் உள்ளவர்கள் காப்பர் நீரால் பயனடையலாம், ஏனெனில் இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. “கீல்வாதம் உள்ள நபர்கள் தாமிரத்தின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளிலிருந்து பெரிதும் பயனடைகிறார்கள்.”

செரிமானத்திற்கு உதவுகிறது

நீங்கள் செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், காப்பர் நீரை குடிக்கவும், ஏனெனில் இது தீங்கு விளைவிக்கும் கிருமிகளை நீக்குகிறது, மேலும் வயிற்று எரிச்சலைக் குறைக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

இருதய அமைப்பைப் பாதுகாக்கிறது

சரியான இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலமும், இரத்த நாளங்களை விரிவடைய அனுமதிப்பதன் மூலமும் காப்பர் நீர் உடலுக்கு நன்மை செய்கிறது.

வயதான செயல்முறையை கட்டுப்படுத்துகிறது

ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் வயதான செயல்முறையைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.

பக்கவாதம் வராமல் தடுக்கிறது

மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுவதால், காப்பர் நீர் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது, ஏனெனில் இது “ஆக்ஸிடன்ட்கள் வேகமாக அல்லது சிறப்பாக செயல்படுவதைத் தடுக்கிறது”.

எடை இழப்புக்கு உதவுகிறது

உடலில் உள்ள “சரியான அளவு தாமிரம்” “உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும் கொழுப்பை எரிப்பதன் மூலமும்” எடை இழப்புக்கு உதவுகிறது.

காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது

ஆயுர்வேத நிபுணரின் கூற்றுப்படி, காயம் ஏற்பட்ட இடத்தை காப்பர் நீரில் கழுவுவது “பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்கிறது மற்றும் தோல் மீளுருவாக்கம் செய்து, விரைவாக குணமடைய உதவுகிறது”.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது

காப்பர் ஒரு முக்கியமான கனிமமாகும், இது சில இரத்தக் கோளாறுகளைத் தடுக்க உடலுக்குத் தேவைப்படுகிறது. அந்தவகையில் காப்பர் நீர், உங்கள் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, தொற்றுநோயைக் குறைக்க உதவுகிறது.






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்