World Chess Olympiad 2022 | யோசிக்கணும்… நகர்த்தணும்… ஜெயிக்கணும்… செஸ்ஸில் ‘கிராண்ட்மாஸ்டர்’ என்றால் யார்?
- Get link
- X
- Other Apps
World Chess Olympiad 2022 | கிராண்ட்மாஸ்டர் என்பது ஒரு சதுரங்க வீரர் அடையக்கூடிய மிக உயர்ந்த பட்டமாகும். இந்த பட்டம் செஸ்ஸின் மிக உயர்ந்த நிர்வாகக் குழுவான FIDE-ஆல் வழங்கப்படுகிறது.
FIDE என்பது சதுரங்க விளையாட்டின் மிக உயர்ந்த அதிகாரமாகும். இது ‘உலக செஸ் கூட்டமைப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது. ஜூலை 20, 1924-ல் இந்த FIDE நிறுவப்பட்டது. இது, சதுரங்க விளையாட்டின் தனிநபர் விளையாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான சதுரங்க விதிகளை உருவாக்குவது ஆகும்.
கிராண்ட்மாஸ்டர் என்றால் என்ன?
கிராண்ட்மாஸ்டர் என்பது ஒரு சதுரங்க வீரர் அடையக்கூடிய மிக உயர்ந்த பட்டமாகும். இந்த பட்டம் செஸ்ஸின் மிக உயர்ந்த நிர்வாகக் குழுவான FIDE-ஆல் வழங்கப்படுகிறது. கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை ஒருமுறை வென்றால் வாழ்நாள் முழுவதும் தொடரலாம். இருப்பினும், உலக செஸ் கூட்டமைப்பு அதற்கு சில விதிகளை வகுத்துள்ளது. அது, ஒரு வீரர் ஏதேனும் போட்டியில் ஏமாற்றினாலோ மற்றும் ஊழல் செய்தாலோ குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரிடமிருந்து பட்டத்தை பறிக்கலாம் என்பது ஆகும்.
இதுவரை, இந்தியா 74 கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இது நாட்டின் கிராண்ட்மாஸ்டர்கள் பட்டியலில் 35 சதவீத பங்களிப்பாகும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் சுப்பராமன் விஜயலட்சுமி உட்பட இதுவரை ஏழு பெண் கிராண்ட்மாஸ்டர்களை இந்தியா கண்டுள்ளது. ஜூலை 17, 2022 நிலவரப்படி, FIDE தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 477 வீரர்களைக் கொண்டுள்ளது; இது ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 209 என்ற எண்ணிக்கையை கொண்ட ரஷ்யாவை விட அதிகமாகும்.
1961-ம் ஆண்டு நாட்டின் முதல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாட்டில் வளர்ந்த மானுவல் ஆரோன் வென்றார், 1988-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டராக சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து சுப்பராமன் விஜயலட்சுமி 2001-ல் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றார் மற்றும் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2018-ல் தனது 12-வது வயதில் உலகின் இரண்டாவது இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். மேலும், ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் தனது 12-வது வயதில் 1990ஆம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்த உலகின் முதல் இளைய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவார்.
செஸ் வீரர் எப்படி கிராண்ட்மாஸ்டர் ஆகிறார்?
ஒரு வீரர் குறைந்தபட்சம் 2500 ‘Elo rating’-ஐ அடைந்திருக்க வேண்டும்
ஒரு வீரர் குறைந்தபட்சம் 27 விளையாட்டுகளில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு சாதகமான முடிவுகளைப் பெற வேண்டும், அதில், குறைந்தபட்சம் 120 நிமிடங்களுக்குக் குறையாமல் சிந்தித்து குறைந்தபட்சம் 9 சுற்றுகளுக்கு மேல் விளையாடும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குறைந்தது மூன்று கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளில் மோத வேண்டும்
கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்குத் தகுதிபெற, குறைந்தபட்சம் 2600 Tournament Performance Rating-ஐ (TPR) அடைய வேண்டும்
ஒரு வீரர், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், பெண்கள் உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலக சீனியர் சாம்பியன்ஷிப் ஆகிய மதிப்புமிக்க போட்டிகளில் வெற்றி பெற்றால் கிராண்ட்மாஸ்டர் ஆகலாம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்தால், உலக செஸ் கூட்டமைப்பு ஒருவருக்கு கிராண்ட்மாஸ்டர் பட்டம் என்கிற உயர்ந்த பட்டத்தை வழங்குகிறது. எனவே, சதுரங்கத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை நம்மால் உணர முடியும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment