குழந்தைகளின் மனச்சோர்வை குறைக்கும் உணவுகள் ...........
- Get link
- X
- Other Apps
பெரியவர்களை போல குழந்தைகளுக்கும் மனச்சோர்வு ஏற்படும். அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவுப்பொருட்களை உட்கொண்டே குறைத்து, குழந்தைகளை குஷிப்படுத்தலாம். அதுபற்றி பார்க்கலாம்.
1. சாக்லேட் மனச்சோர்வு குறைய சாக்லேட் ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டி-டிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும்போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்டமின்-பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைக்கும்.
2. பாதாம் பருப்பு இதில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு வரும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக் கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.
3. கடல் உணவு கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது 'ரிலாக்ஸ்' ஆக இருப்பதோடு, புத்துணர்ச்சியும் பெறும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும்.
4. பால் குழப்பமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளின் உணவில் பால் அல்லது பால் சம்பந்தமான பொருளான தயிரை அதிகம் சேர்க் கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.
ALSO READ : கீரைகளும், சத்துக்களும்..!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment