நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

35 கிலோ மலைப் பாம்பு வறுவல்… கேரளா யூடியூபரின் வேற லெவல் அதிர்ச்சி குக்கிங் வீடியோ!

 கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்த குக்கிங் வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.


கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்து குக்கிங் வீடியோவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதையே இந்தியாவில் செய்திருந்தால் இன்னேரம் சிறையில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவில் வன விலங்குகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

யூடியூபில் அரசியல், சினிமா வீடியோக்களைவிட சமையல் வீடியோக்கள்தான் அதிக அளவிலான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அதே போல, குக்கிங் வீடியோக்களை வெளியிடும் யூடியூபகர்கள் பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறார்கள். அதனால், குக்கிங் வீடியோ வெளியிடுபவர்கள் விதவிதமான உணவை சமைத்து வீடியோ பதிவேற்றி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறார்கள்.

அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் விளாக்கர் ஃபிரோஸ் சுட்டிபாரா ஒரு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு குக்கிங் வீடியோ வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.


குக்கிங் வீடியோக்களை வெளியிடும் பிரபல யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிப்பாரா தனதுயூடியூப் சேனலில் தனித்துவமான சுவை மிகுந்த உணவை சமைத்து வீடியோக்களை வெளியிடுவார். இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள ஃபிரோஸ் சுட்டிபார 35 கிலோ மலைப்பாம்பை வெட்டி, இந்திய மசாலாவைப் போட்டு கிரில்லில் வறுத்துக் காட்டி அதிர்ச்சி அளித்துள்ளார்.

பாம்பை சமைப்பதற்கு முன், ஃபிரோஸ் இந்தோனேசியாவில் வீடியோவைப் படமாக்குவதாகக் கூறுகிறார். மேலும், இந்தியாவில் காட்டு விலங்குகளைக் கொல்வதும் சமைப்பதும் குற்றம் என்பதால் பார்வையாளர்கள் இதை வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

இந்த வீடியோவில் ஃபிரோஸ் சுட்டிபார, தனது நண்பருடன் ஒரு பிளாஸ்டிக் பேஸ்கட்டில், ஒரு பெரிய மலைப்பாம்பை எடுத்து வருகிறார். அதை, ஒரு இந்தோனேசியரை வைத்து வெட்டி தோலை உரித்து, கரியை எடுத்து, இந்திய மசாலாவைத் தடவி, கிரில்லில் வைத்து வறுக்கிறார்கள்.

இந்த வீடியோ, குக்கிங் வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. ஆனால், இது போல, மலைப்பாம்பை கிரில் செய்ய யாரும் முயற்சி செய்ய வேண்டாம். ஏனென்றால், இந்தியாவில் பாம்பு, மலைப்பாம்பு போன்றவிலங்குகளைக் கொல்வது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தகைய செயலில் ஈடுபட்டால் நிச்சயம் சிறை தண்டனை கிடைக்கும். அதனால், ஃபிரோஸ் சுட்டிபார இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

ஃபிரோஸ் 35 கிலோ மலைப்பாம்பை வெட்டி தோலை நீக்கி சுத்தம் செய்து இந்திய மசாலாவைத் தடவி கிரில்லில் வறுத்து எடுத்து மிகப் பெரிய வாழை இலையில் வைக்கிறார். அதை அங்கே உள்ள இந்தோனேசியர்களும் சில இந்தியர்களும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சாப்பிடுகிறார்கள். குக்கிங் வீடியோவை வேற லெவலுக்கு எடுத்துச் என்றுள்ள ஃபிரோஸின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 1,67,000 பேர் லைக் செய்துள்ளனர். 7,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்