நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம் - இதன் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?

 உலகில் பல இடங்களில் ஏதாவது ஒரு மூளையில் சாதனைகள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில், கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்து சேர்ந்த நகைக்கடை செய்த கின்னஸ் உலக சாதனை ஒன்று, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது, ஒரு மோதிரம் என்றால், அதில் சில வைரங்களை கொண்டு வடிவமைக்கபட்டதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், SWA டைமண்ட்ஸ் தற்போது உருவாக்கி உள்ள மோதிரம் ஒன்றில், சுமார் 24,679 வைரங்களை கொண்டு ஒரு மோதிரத்தை உருவாக்கி உள்ளனர்.

காளான் மோதிரம்

மேலும், இந்த மோதிரம் காளான் போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்த மோதிரத்திற்கு அமி என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத சொல்லான இந்த வார்த்தை, 'அழியாத தன்மை' மற்றும் 'நீண்ட ஆயுள்' என்பதைக் குறிக்கின்றது.

இதற்கு முன்பு, மீரட் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர், சுமார் 12,638 வைரங்களைக் கொண்டு உருவாக்கி இருந்த மோதிரம் தான் கின்னஸ் சாதனையை படைத்திருந்தார்.

தற்போது அதை SWA டைமண்ட்ஸ் தற்போது முந்தி சாதனை படைத்துள்ளது. தங்களின் நிறுவனத்தின் மீது மக்களின் கவனத்தை திரும்புவதற்கான முயற்சிக்காக இந்த சாதனை மோதிரம் வடிவமைக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை

மேலும், இதனை வடிவமைக்க சுமார் 3 மாதங்கள் ஆகியுள்ளது. முதலில் 3டி பிரின்டிங் மூலம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து மோதிரத்தின் இதழ்களின் ஒவ்வொரு பக்கத்திலும் கைகளைக் கொண்டே, வைரங்களை தனித்தனியாக வைத்துள்ளதாக வைரக்கடை நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், கின்னஸ் அதிகாரிகள், மைக்ரோஸ்கோப் மூலம் வைரத்தின் எண்ணிக்கை, எடை, கேரட் உள்ளிட்டவற்றை பரிசோதித்து பார்த்துள்ளனர். இந்த காளான் மோதிரத்தின் வீடியோ ஒன்றையும் கின்னஸ் உலக சாதனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 




ALSO READ : "Kim Kardashian போல தோற்றம் வேண்டாம்" - காஸ்மெடிக் சர்ஜரிக்கு 5 கோடி செல்வழித்த பெண்.....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்