நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இலங்கை அதிபர் மாளிகையில் இந்த இளம்பெண் செய்த காரியம்தான் தற்போதைய ஹைலைட்....

 பொருளாதார தோல்வியை சந்தித்துள்ள இலங்கையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டக் காட்சிகள் தான் அண்மைக்காலமாக அனைத்து செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.


பொருளாதார தோல்வியை சந்தித்துள்ள இலங்கையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டக் காட்சிகள் தான் அண்மைக்காலமாக அனைத்து செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன. பொதுமக்கள் பெரும் திரளாக அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே அவசர, அவசரமாக வெளியேறி போர் கப்பல் மூலமாக தப்பிச் சென்றதையும், பின்னர் அவர் வெளிநாடுகளில் தஞ்சம்  அடைந்தார்.

இதற்கிடையே இலங்கையின் தற்காலிக அதிபராக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் அரங்கேற்றிய குதூகலமான நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிக் கொண்டிருந்தன.

குறிப்பாக, அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து ஆட்டம் போட்டனர். சிலர் அதிபர் மாளிகையின் பெட் ரூம்களுக்குள் சென்று அங்கிருந்த மெத்தை மற்றும் சோஃபாக்களில் படுத்து, உருண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். கடும் போராட்டத்துக்கு இடையிலும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நடத்தும் இதுபோன்ற சுவாரஸ்யக் காட்சிகள் தான் தற்போதைய ஹைலைட்டான விஷயங்களாக மாறி வருகின்றன.

ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்

தன்னைப் போன்ற இளம்பெண்கள் பலர் போராடிக் கொண்டிருந்த சமயத்தில், மதுஹன்ஸி ஹசிந்தாரா என்ற இளம்பெண்ணும் அதிபர் மாளிகைக்குள் சென்றார். ஆனால், இவர் சென்ற போராடுவதற்காகவோ அல்லது போராளிகளை ஊக்குவிப்பதற்காகவோ அல்ல. ஏதோ சுற்றுலா தளத்திற்கு புத்துணர்ச்சி தேடி வந்திருப்பதை போல, அதிபர் மாளிகையில் உள்ள அழகான பகுதிகள் மற்றும் சொகுசு கார்கள் முன்பு நின்றபடி ஃபோட்டோசூட் நடத்தினார் ஹசிந்தாரா.

அதிபர் மாளிகையில் உள்ள சோஃபா, மெத்தை, நாற்காலிகள், வராண்டா என ஒரு இடம் பாக்கி வைக்காமல் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் அவர். மொத்தம் 26 படங்கள் அடங்கிய தொகுப்பை “கொழும்புவில் அதிபர் மாளிகையில் இருந்து’’ என்ற தலைப்பின் கீழ் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டார்.


நெட்டிசன்களின் ‘வாவ்’ பாராட்டு

ஃபேஸ்புக்கில் ஹசிந்தாரா வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “நீங்கள் ராணியை போல காட்சியளிக்கிறீர்கள். இந்த ஃபோட்டோசூட் எனக்கு பிடித்திருக்கிறது’’ என்று கூறியுள்ளார். “இது புரட்சிகரமான ஃபோட்டோசூட் என்று மற்றொரு பதிவாளர் கூறியுள்ளார்.

நூலகத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திய போராளிகள்

அதிபர் மாளிகையை பலர் குதூகலமாக பயன்படுத்தி வரும் நிலையில், அங்குள்ள நூலகத்தை போராளிகள் சிலர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினர். அதிபர் என்ற முறையில் அன்பளிப்பாக பெறப்பட்ட 30 ஆயிரம் புத்தகங்கள் அங்குள்ள நூலகத்தில் இருக்கின்றன. போராளிகள் பலர், அந்தப் புத்தகங்களை எடுத்து ஆர்வத்துடன் படித்தனர்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!