இந்த ஒரு கீரையை அடிக்கடி சாப்பிட்டால் ஓராயிரம் நோய்கள் தீருமாம்!
- Get link
- X
- Other Apps
மணத்தக்காளி கீரையானது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு அடுக்கடுக்கான நன்மைகள் கிடைக்க பெறுகின்றது.
மணத்தக்காளி கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணம் உண்டு.
மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் உஷ்ணம் உடைந்து உடலானது குளிர்ச்சியடையும்.
மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாகும்.
மணத்தக்காளி வற்றலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும்.
கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு மணத்தக்காளி செடியின் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அருந்தி வர இந்த நோய்கள் சீக்கிரம் நீங்குவதற்கு துணைபுரியும்.
மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும்.
ALSO READ : வாய் துர்நாற்றத்தால் அவஸ்தையா? இதனை போக்க இதோ சில எளிய இயற்கை வழிகள்.....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment