Optical Illusion | வழக்கமாக ஆப்டிக்கல் இல்யூஷன் என்றாலே ஒரு படம் அல்லது வீடியோவில் மறைந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் ஆனால் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் படு வித்தியாசமான ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்று நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.
ஆப்டிக்கல் இல்யூஷன்கள் கலை மற்றும் உளவியலின் சரியான கலவையாகும். இவை இணையதளவாசிகளின் முதன்மையான பொழுபோக்காக மாறி வருகிறது. ஆளுமை திறன், பேச்சு, நடை, பாவனை, தோற்றம், குணநலன்கள் ஆகியவற்றை அறியும் வகையில் ஆளுமை சோதனை தொடர்பானவை, கண்ணுக்கும் மூளைக்கும் கண்ணாமூச்சி காட்டும் புதிர் விளையாட்டுக்கள் என பலவகையான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இருப்பினும், ஒன்றுக்கு ஒன்றுக்கு சவால் விடும் வகையில் நாளுக்கு நாள் புதுப்புது ஆப்டிக்கல் இல்யூஷன்கள் இணையத்தை கலக்க தவறுவது இல்லை. அப்படி ஒரு வித்தியாசமான ஆப்டிக்கல் இல்யூஷனைத் தான் நாங்கள் இன்று உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.
வழக்கமாக ஆப்டிக்கல் இல்யூஷன் என்றாலே ஒரு படம் அல்லது வீடியோவில் மறைந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் ஆனால் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் படு வித்தியாசமான ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்று நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.
தற்போது திருமண உடையில் மறைத்திருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் நெட்டிசன்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. Reddit தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவில், கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகள் ஒருவர் வெள்ளை திருமண ஆடையை அணிந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனை முதலில் மேலோட்டமாக நீங்கள் பார்க்கும் போது சாதாரணமான திருமண ஆடைப் போல் தோன்றலாம், ஆனால் அந்த திருமண ஆடையில் செய்யப்பட்டிருக்கும் எம்பிராய்டரி வேலைகளை நன்றாக உற்று நோக்கினால் ஒரு புதிர் மறைத்திருப்பதை காணமுடியும்.
ஆம், அந்த திருமண உடையின் எம்பிராய்ட்ரி வேலைப்பாடுகளுக்கு இடையே ஒரு உருவம் மறைந்துள்ளது. அந்த உடையை நன்றாக உற்றுப்பார்த்தால், கண்களுக்கு வட்டங்கள், மூக்கு போன்ற நீள்வட்ட வடிவமைப்பு தெரியும். இப்போது அதனை நன்றாக ஆராய்ந்தால், இரண்டு கோபக்கார கண்கள் தெரிகிறதா?. ஒரு முரட்டு முதியவரின் முகம் கண்களை அகலமாக விரித்து உங்களைப் பார்ப்பது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் எம்பிராய்டரிக்கு இடையே மறைந்துள்ளதை காணலாம்.
இதனைப் பகிர்ந்த யூஸர், "இந்த ரத்தினத்தை ஸ்டில்வைட்டில் பார்த்தேன் - அப்போது எனது பார்வையில் ஒரு எரிச்சலான முதியவரின் முகத்தையும் பார்க்க முடிந்தது” என பதிவிட்டுள்ளார். ஸ்டில்வைட் என்பது இங்கிலாந்தை தளமாகக் கொண்ட திருமண ஆடை பஜார், அதில் ரத்தினம் போன்ற மதிப்புமிக்க இந்த திருமண உடையை பார்த்ததாக பயனர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டோ ஆன்லைன் தளத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து பல சுவாரஸ்யமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு யூஸர் "இது ஒரு ஆடையில் திட்டவட்டமான உளவியல் சோதனை! அனைத்து விருந்தினர்களுக்கும் வேடிக்கையான விளையாட்டு!" என பதிவிட்டுள்ளார். சிலர் திருமண உடையில் சீனா டிராகனைப் பார்ப்பதாக பதிவிட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக தி டிரஸ் என்று அழைக்கப்படும் ஒரு லேஸ்டு டிரஸை ஒரு பிரிவினர் வெள்ளை மற்றும் தங்க நிறமாகவும், மற்ற பிரிவினர் அதே ஆடையை கருப்பு மற்றும் நீல நிறமாகவும் இருப்பதாகவும் தெரிவித்தனர். உடையின் நிறத்தை வைத்து உருவாக்கப்பட்ட அந்த ஆப்டிக்கல் இல்யூஷனை கண்ட ஒவ்வொரு குழுவும், மற்றொன்று தவறானது என்பதில் உறுதியாக இருந்தனர்.
Comments
Post a Comment