நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Laptop Tips: இதை செய்தால் ஹேக்கர்களுக்கே நீங்கள் சவால் விடலாம்....

 ஹேக்கர்களின் ஆபத்து அதிகரித்துவிட்ட நிலையில், அவர்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பதற்காக தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்கள் இவை .


  • லேப்டாப்பை குறிவைக்கும் ஹேக்கர்கள்
  • நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
  • ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க டிப்ஸ்.

Laptop Tips l: நாளுக்குநாள் தொழில்நுட்பங்கள் எல்லாம் புதுபுது வழிகளில் அப்டேட்டாகிக் கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் ஒரு கம்யூட்டரை பார்ப்பதே அரிதாக இருந்த நிலையில், இப்போது ஒரு  வீட்டில் நான்கு கம்பயூட்டர்கள் என்ற நிலை வந்து, அவையும் லேப்டாக்களாக மாறி வருகிற சூழல் உருவாகிவிட்டது. எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லலாம், உபயோகப்படுத்துவதற்கு எளிமை ஆகியவையே லேப்டாப்களை மக்கள் அதிகம் விரும்புவதற்கு காரணம். 

ஆனால், நீங்கள் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் சிறிய தவறு காரணமாக உங்கள் லேப்டாப் ஹேக் செய்யப்படலாம். எனவே லேப்டாப் ஹேக் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

Google-ல் செய்யக்கூடாதவை

லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் கூகுள் பிரவுசரை பயன்படுத்துவீர்கள். அப்போது எந்த வெப்சைடுக்கு வேண்டுமானாலும் நீங்கள் இயல்பாக செல்வீர்கள். அப்படியான சூழலில் நம்பிக்கை தன்மையற்ற வெப்சைடுகளுக்கு நீங்கள் செல்லக்கூடாது. அந்த வெப்சைட்டுகளின் நோட்டிபிகேஷன்களுக்கும் அனுமதி கொடுக்கக்கூடாது. ஒருவேளை அவை போலி இணையதளமாக இருந்தால், ஹேக்கர்களின் பிடியில் உங்கள் லேப்டாப் சென்றுவிடும். 

பாதுகாப்பற்ற லிங்க்

பலருக்கு மின்னஞ்சல் மூலம் தெரியாத இணைப்புகளை அனுப்புவதன் மூலம், ஹேக்கர்கள் அவர்களின் மடிக்கணினிகளை ஹேக் செய்து அவற்றைத் தடுக்கவும் வேலை செய்கிறார்கள். மின்னஞ்சலில் உள்ள அத்தகைய இணைப்பைக் கிளிக் செய்தவுடன், உங்கள் லேப்டாப் ஹேக் செய்யப்படுகிறது. இது குறித்து நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தெரியாத அல்லது சந்தேகத்துக்கு இடமான லிங்குகள் வந்தால் அவற்றை புறக்கணித்துவிடுங்கள். 

வங்கி தகவல்

பெரும்பாலானோர் தங்கள் லேப்டாப்பில் நெட்பேங்கிங் செய்வார்கள். அடிக்கடி வங்கிக் கணக்கிற்குள் செல்ல வேண்டியிருந்தால், பாஸ்வேர்டு உள்ளிட்ட லாகின் தகவல்களை சேமித்து வைத்திருப்பார்கள். இது ஒருபோதும் செய்யக்கூடாதவை. அவ்வாறு செய்திருந்தீர்கள் என்றால் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்பட்டுவிடும். 

ரகசிய தகவல்கள் கூடாது

பலர் மடிக்கணினிகளில் பல மூன்றாம் தரப்பு வலைத்தளங்களைப் பார்வையிடுவதன் மூலம் டெபிட்-கிரெடிட் கார்டு பின், நெட் பேங்கிங் பாஸ்வேர்டு போன்ற தங்களின் ரகசியத் தகவல்களைச் சேமிக்கிறார்கள். இதை ஒருபோதும் செய்யாதீர்கள். இவையெல்லாம் செய்யாமல் இருந்தால் லேப்டாப் ஹேக் செய்யப்பட்டால் கூட உங்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!