உங்கள் முகத்தை ரோபோக்கு கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் கிடைக்கும் !
- Get link
 - X
 - Other Apps
 
மனிதர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதியில் 'சோபியா' என்ற ரோபோவிற்கு முதன் முதலாக குடியுரிமை அளிக்கப்பட்டது.
நம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமே மனித ரோபோக்கள். இவை மனிதர்களால் மைந்த வேலையை செய்ய உருவாக்கப்பட்டவை. இவை பொழுதுபோக்கிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், வேலைகளை செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'எந்திரன்' படத்தின் மூலம் மனித ரோபோக்கள் மக்களிடத்தில் அதிகமாக பிரபலமானது. இந்த காலத்தில் ரோபோக்கள் பல ஆச்சர்யமான விஷயங்களை செய்து மனிதர்களை வியக்க வைக்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதியில் 'சோபியா' என்ற ரோபோவிற்கு முதன் முதலாக குடியுரிமை அளிக்கப்பட்டது. இதன்மூலம் ரோபோவின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து அறியமுடிகிறது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரோபோ தயாரிக்கும் நிறுவனமான PROMOBOT மனித ரோபோக்களை தயாரிக்க மனிதர்களின் முக மாதிரிகளை கொடுத்தால் ரூ.1.5 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பழகிய முகங்களின் வடிவங்களை ரோபோவிற்கு பயன்படுத்தினால் அதனை பயன்படுத்துவோருக்கு வசதியாக இருக்கும், அதுவே அறிமுகமில்லாத முகங்களாக இருந்தால் அது அவர்களுக்கு அவர்களுக்கு வசதியாக இருக்காது.
இதற்கு முக மாதிரிகளை கொடுக்க சில நிபந்தனைகள் உள்ளது. அதாவது, முக மாதிரியை கொடுக்கும் நபர் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், பின்னர் அவர்களின் முகம் மற்றும் உடலின் 3D மாதிரிகள் எடுக்கப்படும், அவரது குரலை அந்த ரோபோவிற்கு பதிவு செய்ய முக மாதிரியை கொடுக்கும் நபர் குறைந்தது 100 மணி நேரம் வார்த்தைகளை கூற வேண்டும். மேலும் அவர்கள் முகத்தின் மாதிரியை ரோபோவிற்கு கொடுக்க வரம்பற்ற காலத்திற்கும் முக மாதிரியை பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதன் பின்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படும்.
ALSO READ : தனது மரணத்திற்கு பின்னும் வாரிசாக குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆண்கள்.........
- Get link
 - X
 - Other Apps
 


Comments
Post a Comment