கடலில் சர்ப்பிங் செய்யும் நாய்கள்.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ......
- Get link
 - X
 - Other Apps
 
சர்பிங் செய்யும் போது அந்த இரண்டு நாய்களும் பயப்படாமல் முன் வந்து நிற்கும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாய்கள் இயல்பாக நீச்சல் அடிக்கும் திறன்கள் பெற்றவை. பொதுவாகவே தண்ணீரை பார்த்து அவ்வளவு பயப்படாத நாய்கள், கடலில் சர்பிங் செய்யும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை பிஜன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இரு நாய்களுடன் கடலில் ஒருவர் சர்பிங் செய்துவரும்போது, அந்த நாய்கள் பயப்படாமல் உடன் வருவதை பார்க்க முடிகிறது. அந்த நாய்களும் விழுந்துவிடாமல் இருக்க ஒரே நிலையில் தங்களை வைத்துக்கொள்கின்றன.
ஒரு நாய் சர்பிங் செய்பவர் முதுகில் ஏறி நிற்கிறது. மற்றொரு நாய், பயப்படாமல் அந்த பலகையின் முன் வந்து நிற்கிறது. இரண்டு நாய்களும் கரையை அடைந்த உடன் துள்ளி குதித்து விளையாடி வருவதை பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவை பார்த்த இன்னொருவர், “என்னால நேராக நடக்ககூட முடியாது. ஆனால் இந்த நாய்கள் நிலை தடுமாறாமல் இருக்கின்றன” என நகைச்சுவையாக எழுதியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த பிஜன். “அருமையான வீடியோ” என எழுதி பதிவிட்டுள்ளார்.
ALSO READ : கடலில் கண்டெடுக்கப்பட்ட ரூ.28 கோடி மதிப்புள்ள அம்பர் கிரிஸ்.. போலீசில் ஒப்படைத்த மீனவர்கள்...
- Get link
 - X
 - Other Apps
 

Comments
Post a Comment