ஹாட் டெஸ்கிங், ஸ்மார்ட் கேலரியுடன் ஜூம் ரூம்கள், ஜூம் வைட்ஜெட், ஜூம் போன் மற்றும் ஜூம் சாட்ஸின் ஹடில் வியூ உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களும் அறிமுகமாக உள்ளன.
கோவிட் வைரஸூக்குப் பிறகு வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுவிட்டது. இதனால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வேலைகளில் ஈடுபட்டு வரும் பலரும் ஜூம், கூகுள் மீட் போன்ற வீடியோ தளங்கள் மூலம் அன்றாடம் மீட்டிங்கில் பங்கேற்கின்றனர். நாள்தோறும் யூசர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களின் வசதிக்கேற்ப வீடியோ செயலிகள் பல்வேறு அப்டேட்டுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஜூம் செயலி, அசத்தலான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மொழிகளைக் கொண்டவர்களும் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழல் உள்ளது. அப்போது, ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த மொழியில் பேசும்போது, மற்றவர்களுக்கு புரியாது. இது மீட்டிங்கில் பங்கேற்பவர்களுக்கு சங்கடமான சூழலாக இருக்கும் என்பதால், வீடியோ காலில் லைவ் டிரான்ஸ்லேஷன் மற்றும் டிரான்ஸ்கிரிப்சன்களை கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 12 மொழிகளில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஜூம் நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளது. இந்த அம்சம் ஜூம் செயலியில் பயன்பாட்டுக்கு வந்தால், பங்கேற்பாளர்களிடையே இருக்கும் மொழித் தடைகள் இருக்காது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் டெக்னாலஜியைப் பயன்படுத்தி, பேசுபவரின் உரையை மொழிப்பெயர்த்து சொல்லாடலாக திரையில் காண்பிக்கும். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஜூம் நிறுவனம், முதல் கட்டமாக 12 மொழிகளில் அறிமுகமாகும் டிரான்ஸ்லேஷன் மற்றும் டிரான்ஸ்கிரிப்சன் டெக்னாலஜி, குறுகிய காலத்தில் 30 மொழிகளுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. கைட்ஸ் என்ற டிரான்ஸ்லேஷன் நிறுவனத்தை அண்மையில் வாங்கிய ஜூம் நிறுவனம், 2 மாதங்களுப் பிறகு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கைட்ஸ், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். எவ்வளவு தொகைக்கு வாங்கியது என்பது குறித்த தகவலை ஜூம் நிறுவனம் இதுவரை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவில்லை. ஜூம் செயலியில் வரும் மற்றொரு அப்பேட், வைட்போர்டு ஆப்சன் ஆகும். டிஜிட்டல் கேன்வாஸாக வொர்க் ஆகும் இந்த ஆப்சன் மூலம் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றும் அலுவலக ஊழியர்களை வெர்ச்ஷூவல் ஒயிட்போர்டு வழியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.
இதேபோல், ஹாட் டெஸ்கிங், ஸ்மார்ட் கேலரியுடன் ஜூம் ரூம்கள், ஜூம் வைட்ஜெட், ஜூம் போன் மற்றும் ஜூம் சாட்ஸின் ஹடில் வியூ உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களும் அறிமுகமாக உள்ளன. ஜூமின் இந்த அப்டேட்டுகள் இடம்பெறும்பட்சத்தில் வாடிக்கையாளர்களிடையே ஏகோபித்த வரவேற்புடன் தவிர்க்க முடியாத சக்தியாக வளரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஜூம் செயலிக்கு போட்டியாக உள்ள கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளும், ஜூமின் இந்த அப்டேட்டுகளை உற்று நோக்கி வருகின்றன. அவையும் ஜூம் செயலியின் அப்டேட்டுகளுக்கு ஏற்ப மேம்படுத்திக்கொள்ளும் எனவும் டெக் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment