பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தினமும் இரண்டு வேளை பிரியாணி பரிமாறப்பட்டதாகவும் இந்த தொகை மட்டுமே 27 லட்சத்துக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
நியூசிலாந்து வீரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பணியமர்தப்பட்ட பாகிஸ்தான் போலீசார் 27 லட்ச ரூபாய்க்கு பிரியாணி மட்டும் சாப்பிட்ட பில்லை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ராவல்பிண்டியில் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் லாகூரில் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றிருந்தது. இரு அணிகளுக்குமிடையேயான தொடர் கடந்த 17ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் தங்கள் அணி வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தொடரில் விளையாடாமல் அவசர அவசரமாக நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினர். நியூசிலாந்து அணி தொடரை திடீரென ரத்து செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் சிக்கலையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
நியூசிலாந்து வீரர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள செரினா ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக 5 எஸ்பிக்கள் உள்ளிட்ட 500 போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் போலீசார் 27 லட்ச ரூபாய்க்கு பிரியாணி மட்டும் சாப்பிட்ட நிலையில் அந்த பில் தொகையை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தினமும் இரண்டு வேளை பிரியாணி பரிமாறப்பட்டதாகவும் இந்த தொகை மட்டுமே 27 லட்சத்துக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
இந்த பில் தொகையை தற்போது ஓட்டல் நிர்வாகம் பாகிஸ்தான் நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பில் தொகை இன்னும் ஓட்டல் நிர்வாகத்துக்கு கிளியர் ஆகவில்லை என கூறப்படுகிறது. பிரியாணி பில் தவிர்த்து பிற உணவுகளில் பில் தொகை இதில் சேர்க்கப்படவில்லை.
போலீசார் தவிர்த்து கமாண்டோ பிரிவினர், எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் நியூசிலாந்து வீரர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்த அதிர்ச்சியில் இருந்து மீளாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது நியூசிலாந்து வீரர்களுக்கு பாதுகாப்பு அளித்த போலீசார் சாப்பிட்ட பிரியாணி பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த பில் தொகையை எப்படி சமாளிக்கும் என பலரும் கேள்வி எழுப்பினர்.
Comments
Post a Comment