நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒருவரை கொலை செய்யும் அளவிற்கு அபாயகரமானது ஹைட்ரோபோபிக் கத்தி!

 ஹைட்ரோபோபிக் கத்தியை நுண்ணோக்கின் கீழ் வைப்பதற்கு முன்பு இது ஒரு சீரியல் கொலைகாரனுக்கு சரியான ஆயுதமாக இது இருக்கலாம்.


அனைத்து கொலை-மர்ம நாவல்கள் மற்றும் திரைப்படங்களிலும் பல உபகரணங்கள் உயிரைக் கொல்லும் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் சில படங்களில் கூர்மையான கண்ணாடிகள், கத்திகள், உள்ளிட்டவை கூட பயன்படுத்தப்படுகின்றன. ஏன், சில நேரங்களில் பனி பிரதேச இடங்களில் படியும் கூர்மையான icicle எனப்படும் ஐஸ்கட்டி முனைகள் கூட ஒருவரின் உயிரை எடுக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்த icicle ஒருவரின் உடலில் ஊடுருவி ரத்தத்தை உறைய வைத்து உயிரை பறிக்கும் தன்மை வாய்ந்தது.

ஆனால் இங்கு ஒரு சிறிய எக்ஸ்பிரிமெண்ட் மூலம் ஐஸ்கட்டியை விட மிகவும் அபாயகரமான ஆபத்தான கருவியை பற்றி யூடியூபர் ஒருவர் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ஒரு ஹைட்ரோபோபிக் கத்தி கொடிய பனிக்கட்டியால் உருவான கத்திக்கு கடுமையான போட்டியை கொடுக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யூடியூபில் ‘ஆக்சன் லேப் ஷார்ட்ஸ்’ என்ற சேனலில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோ, சாதாரண கத்திக்கும் ஹைட்ரோபோபிக் கத்திக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காட்டுவது போல இருக்கிறது.

வீடியோ ஆரம்பத்தில் ஒரு பீக்கரில் இரத்தம் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது, குறிப்பு: அது மனித ரத்தம் இல்லை. பிறகு யூடியூபர் ஒரு சாதாரண கத்தியை எடுத்து பீக்கரில் நனைத்தார். மேலும் அவர் கத்தியை வெளியே எடுக்கும்போது முனைகளில் ரத்தம் ஒட்டிக்கொண்டு கத்தி சிவப்பு நிறமாக தோற்றமளிக்கிறது. ஆனால், யூடியூபர் ஒரு ஹைட்ரோபோபிக் கத்தியை ரத்தம் உள்ள பீக்கரில் நனைக்கும்போது, ​​அதன் முனைகளில் ரத்தம் ஓட்டாமல் முன்பு போலவே சுத்தமாக வெளியே வருகிறது. ஒருமுறைக்கு இருமுறை ரத்தத்தில் கத்தியை நனைக்கும் போதும் ரத்தம் கத்தியில் ஒட்டவில்லை.

இந்த நிலையில், வீடியோவின் அடுத்த பகுதியில் யூடியூபர் தனது சொந்த ரத்தத்தில் கத்தியின் செயல்பாடு குறித்து முயற்சிக்கிறார். அவர் தனது விரலைக் குத்தி ஒரு சொட்டு ரத்தத்தை எடுத்துக்கொள்கிறார். பிறகு அதனை ஒரு நுண்ணோக்கி ஸ்லைடில் வைக்கிறார். அதன் பிறகு ஸ்லைடில் வைக்கப்பட்ட ரத்தத்தில் ஹைட்ரோபோபிக் கத்தியை நனைகிறார். அப்போது கூட கத்தியில் எந்த ரத்த கறையும் படியவில்லை.

இதனை தொடர்ந்து, ஹைட்ரோபோபிக் கத்தியை நுண்ணோக்கின் கீழ் வைப்பதற்கு முன்பு இது ஒரு சீரியல் கொலைகாரனுக்கு சரியான ஆயுதமாக இது இருக்கலாம் என்று யூடியூபர் தெரிவித்துள்ளார். கத்தியை லென்ஸின் வழியாகப் பார்க்கும் போது அதன் பிளேடில் சிவப்பு ரத்தத்தின் பெரிய கறைகள் காணப்படுகின்றன. அதனை விளக்கிய யூடியூபர், “அதைப் பாருங்கள்! ரத்தம் கத்தியில் சிதறடிக்கப்பட்டுள்ளது! ” என்று விளக்கியுள்ளார். ஆனால் வெளியே தெரியவில்லை. வெளிப்படையாக, பனிக்கட்டி கத்தி தான் இன்னும் சரியான கொலை ஆயுதமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த யூடியூப் சேனலின் பெயர் ஆக்சன் லேப் ஷார்ட்ஸ் ஆகும். இந்த சேனலில் அற்புதமான சோதனைகள் மற்றும் அறிவியல் குறிப்புகள் குறித்த பல வீடியோக்கள் உள்ளன. சேனலில் நிகழ்த்தப்பட்ட சில அற்புதமான சோதனைகளில், "ஒரு பறவை எவ்வளவு எடை தூக்கும்", உலகின் கருப்பு வண்ணப்பூச்சுடன் ஒரு முழு அறையையும் வரைதல்" மற்றும் "ஒரு திரவ கலவையை எவ்வாறு பிரிப்பது" போன்றவை அடங்கும். பல சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் வீடியோக்களுக்கு இந்த சேனல் பெயர் போனது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்