5 போலீசார் பொதுமக்கள் சுட்டிக்காட்டிய வீட்டுக்கு சென்ற போது அங்கு பெண் ஒருவர் அலறியதை கேட்டு திகைத்தனர்.
அண்டை வீட்டு பெண் சத்தமாக அலறியதை கேட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்த பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு பெருத்து அவமானம் ஏற்பட்டிருக்கிறது.
உலகிலேயே காவல்துறையில் முதன்மையானவர்கள் யார் என்றால் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் என்று பட்டென பதில் வரும். அப்படிப்பட்ட ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரை சப்பை வேலையை பார்க்க வைத்திருக்கிறார் பெண்மணி ஒருவர்.
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகர் அருகேயுள்ள லிவிங்ஸ்டன் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கடந்த திங்கட்கிழமயன்று இரவு சுமார் 10.30 மணியளவில் பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்டது. மரண ஓலத்தில் அங்கும் இங்கும் ஓடிவயாறு அப்பெண் அலறித்துடித்த நிலையில் தனிமையில் இருந்த பெண் இப்படி அலறுகிறாரே, யாரேனும் கொள்ளையர்களால் அவருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சம் கொண்ட அக்கம்பக்கத்து வீட்டார்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து அறிந்த காவல்துறையினரும் விரைந்து வந்தனர். 5 போலீசார் பொதுமக்கள் சுட்டிக்காட்டிய வீட்டுக்கு சென்ற போது அங்கு பெண் ஒருவர் அலறியதை கேட்டு திகைத்தனர். நாங்கள் போலீஸ் வந்திருக்கிறோம் கதவைத் திறங்கள் என அவர்கள் சொன்ன பின்னர், அந்த வீட்டின் கதவை திறந்தார் 30 வயதாகும் ஹோலி ஹண்டர் எனும் பெண்.
என்ன ஆச்சு ஏதேனும் பிரச்னையா? உள்ள யாரும் இருக்காங்களா என பதற்றத்துடன் காவலர்கள் கேட்டதற்கும், அப்படிலாம் ஒன்னுமில்லை நானும் ஒரு எட்டுக்கால் பூச்சியும் தான் இருக்கிறோம். என அவர் வீட்டின் படுக்கையறைக்குள் ராட்சச எட்டுக்கால் பூச்சி ஒன்று இருப்பதை பார்த்து அதன் காரணமாக அலறிய சம்பவத்தை சொல்லியிருக்கிறார்.
அடச்சே இதுக்கா இவ்வளவு கலவரம் என ஏமாற்றமடைந்த போலீசார் பின்னர் எட்டுக்கால் பூச்சியினால் பீதியில் இருக்கும் ஹோலி ஹண்டருக்கு உதவ முடிவெடுத்தனர். உள்ளே சென்ற காவலர்களுள் ஒருவர் அந்த ராட்சச எட்டுக்கால் பூச்சியை அலேக்காக கையில் தூக்கிக் கொண்டு வந்தார். ஹோலியை பார்த்து இதுக்கா இவ்வளவு கலவரம் என சிரித்தவாறே அவர் அந்த எட்டுக்கால் பூச்சியை வெளியே சென்று அப்புறப்படுத்தினார்.
எட்டுக்கால் பூச்சியை பார்த்து அலறிய பெண்ணுக்காகவா போலீசை கூப்பிட்டோம் என அறிந்த அப்பகுதியினருக்கு பெரும் அவமானம் ஏற்பட்டது, என்ற போதிலும் காவலர்கள் இந்த விஷயத்தை கேஸுவலாக எடுத்துக்கொண்டதால் அவர்களும் நிம்மதியடைந்தனர்.
இது குறித்து இளம்பெண் ஹோலி கூறுகையில், ஏற்கனவே 45 நிமிடங்களாக விட்டில் பூச்சியை விரட்டி விட்டு படுக்கப் போன போது அந்த ராட்சச எட்டுக்கால் பூச்சியை பார்த்தவுடன் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் கத்திவிட்டேன். ஆனால் இவ்வளவு சத்தமாக கத்தியிருக்கிறேன், வெளியே இவ்வளவு பெரிய விஷயமாகும் என நினைக்கவில்லை என்றார்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது செயலுக்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார் ஹோலி ஹண்டர்.
இதுவரை என் வாழ்க்கையில் இப்படியொரு விஷயத்துக்காக அலறியதில்லை. எனக்காக வந்து அந்த எட்டுக்கால் பூச்சியை பிடித்துக் அப்புறப்படுத்திவிட்டு சென்ற அன்பான காவல்துறையினருக்கு என் நன்றிகள். அதன் பின்னர் நான் தனியாக இதை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன். அன் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பயங்கரமான மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஹோலி ஸ்டேட்டஸும் வைத்திருக்கிறார்.
இந்த சம்பவம் ஸ்காட்லாந்து போலீசாரிடையே கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments
Post a Comment