நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மணிகே மாகே ஹிதே பாடலுக்கு ஆள் இல்லா விமானத்தில் அசத்தல் நடனம் - வைரலாகும் வீடியோ

 இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலாக பரவிய நிலையில், அமிதாப்பச்சன், பாலிவூட் பிரபலங்கள் என பலரும் இந்த பாடலை பாராட்டினர்.


இன்ஸ்டாகிராம் , யூடியூப், முகநூல் என அனைத்திலும் ட்ரெண்டாகிய பாடல் ‘மணிகே மாகே ஹிதே’ . இந்த பாலை கேட்டிறாதோர் இருந்திருக்க மாட்டர். இந்த வைரல் ரீல் டிராக்கிற்கு பின்னால் உள்ள பாடகி 28 வயதான இலங்கை இசைக்கலைஞர் யோஹானி.

இலங்கை மற்றும் இந்தியா இரண்டிலும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாடல் கடந்த 3 மாதங்களில் 9.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. முன்னதாக இந்த பாடல் குறித்து நியூஸ் 18 உடனான பிரத்யேக நேர்காணலில், யோஹானி தனது வாழ்க்கை மற்றும் ஒரே இரவில் பாடல் எப்படி வைரல் ஆனது என்பது குறித்து பேசினார்.

இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலாக பரவிய நிலையில், அமிதாப்பச்சன், பாலிவூட் பிரபலங்கள் என பலரும் இந்த பாடலை பாராட்டினர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்தனர். தற்போது இண்டிகோ விமானத்தில் பணிப்பெண் ஒருவர் இந்த பாடலுக்கு நடனமாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 



அந்த வீடியோவில் விமான பணிப்பெண் பிபிஇ கிட் அணிந்து யாரும் இல்லாத விமானத்தில் மணிகே மாகே ஹிதே பாடலுக்கு தன்னந்தனியாக ஆடி கொண்டிருக்கின்றார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்