நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

என்ன ஒரு சமத்து! முதியவர்களை கண்டதும் அமைதியான கரடி – வைரல் வீடியோ

 இந்த கரடியின் செயலை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.


வனவிலங்குகள் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வந்தால் பொருள் சேதம் துவங்கி உயிர் சேதம் வரை ஏற்பட்டு மனதிற்கு துன்பம் தரும் நிகழ்வுகள் அரங்கேறிவிடும். இரண்டு தரப்பிலும் யாருக்கேனும் ஏதேனும் நேர்ந்தால் அது ஈடு செய்ய முடியாத இழப்பாக முடிந்துவிடுகிறது.

ஆனால் இந்த வீடியோவில் வளம் வரும் கரடி ஒன்று என்ன செய்கிறது என்று பாருங்கள். இந்திய வனத்துறை அதிகாரி சுதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், வீட்டின் முகப்பில் நடந்து வந்த கரடி ஒன்று, அந்த வீட்டில் இருந்து ஒரு பாட்டி, தாத்தா வெளியேறுவதைக் கண்டதும் அப்படியே அமைதியாக நின்றுவிட்டது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பரிதவிப்புடன் நாம் இருக்க, ஆனால் அந்த கரடி அவர்களை தாக்கவில்லை. மாறாக அவர்கள் அந்த பகுடியில் இருந்து வெளியேறிய பிறகு அமைதியாக நடந்து சென்றது. இந்த வீடியோவை இது வரையில் 1 லட்சத்தி 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.


also read : வேகமாக வந்த கார்; இருபுறமும் பார்க்காமல் ஓடி வந்த சிறுவன்… கண் இமைக்கும் நொடி தான்… – த்ரில் வீடியோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்