நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நீ வேணா சண்டைக்கு வா.. வாடா .. வந்து பாருடா - சிறுத்தையை நேருக்கு நேர் சண்டைக்கு இழுத்த பூனை - வைரலாகும் வீடியோ

 உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் என்பதை பூனை ஒன்று நிரூபணம் செய்துள்ளது.


மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் சிறுத்தையை உருவம் கண்டு பயமின்றி எதிர்கொண்ட பூனையின் செயல் வைரலாகி வருகின்றது.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.


என்பது திருக்குறள்.     
  (அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:667. )இதற்கான விளக்கம் உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் என்பதாகும்.

இந்த குறளுக்கு பொருந்தும் படி செயல் ஒன்று தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பூனையை துரத்திச் சென்ற சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்துள்ளது. அப்போது சிறுத்தையை கண்டு சிறிதும் அஞ்சாத பூனை அதனை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் துணிந்து நீ வேணா சண்டைக்கு வா.. வாடா .. வந்து பாருடா என்பன போன்று எதிர்த்து நின்றுள்ளது.



கிணற்றின் அருகே சுற்றித்திரிந்த பூனையைப் பிடிக்க சிறுத்தை தொடர்ந்து முயன்றுள்ளது. இறுதியாக பூனை கிணற்றினுள் சுவரின் விளிம்பிக்குச் சென்று நின்றது. பின்னரே தொடர்ந்த சிறுத்தை பூனையை விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் எதிர்த்து நின்ற பூனை நேருக்கு நேர் மோதத் துணிந்த செயல் பார்ப்போரை இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இது குறித்து மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மேற்கு மண்டல துணை வனப் பாதுகாவலர் பங்கஜ் கர்க் கூறுகையில், சிறுத்தை பூனையை துரத்தியது. இறுதியில் சிறுத்தையே கிணற்றில் சிக்கிக் கொண்டது.
வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு காட்டுக்குள் விட்டுள்ளனர்' என்றார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்