கென்யாவில் மண் குளியலை அனுபவிக்கும் குட்டி யானைகளின் கூட்டம் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக சமூக ஊடக தளங்களில் விலங்குகளின் அழகான, வேடிக்கையான மற்றும் பயங்கரமான வீடியோக்கள் பல பகிரப்பட்டு வருகிறது. வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளின் அன்பான சேட்டைகள் நெட்டிசன்கள் பலரின் மனதை கவர்ந்து வருகிறது. அதிலும் சமீப காலமாக காடுகளில் வசிக்கும் விலங்குகளின் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் கூட ஒரு மான் சடலத்திற்காக ஆறு சிங்கங்கள் சண்டையிடும் வீடியோ கிளிப் ஒன்று இணையத்தில் வைரலானது. அதேபோல இப்போது யானை கூட்டங்கள் சில சேற்று மண்ணில் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. கென்யாவில் மண் குளியலை அனுபவிக்கும் குட்டி யானைகளின் கூட்டம் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. 26 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் குட்டி யானைகள் புரண்டு விளையாடும் அழகை காண இரண்டு கண்கள் போதாது. ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ கிளிப்பில் ஒரு பெரிய சேற்று குழியில் சில குட்டி யானைகள் படுத்துக்கொண்டிருப்பதையும், புரண்டு விளையாடுவதையும் காணலாம்.
படுத்துக்கொண்டிருப்பதையும், புரண்டு விளையாடுவதையும் காணலாம்.இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 9ம் தேதி பகிரப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான வியூஸ், கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ்களை பெற்றுள்ளது. கென்யாவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை யானைகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு கென்யாவில் அமைந்துள்ள ஷெல்ட்ரிக் காப்பகத்தை நடத்தி வருகிறது. தனித்துவிடப்பட்ட யானைகளுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலம் வளர்க்கப்பட்டு வரும் யானைகளை பராமரிக்க மேய்ப்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட இந்த அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோவில் ஆதரவற்ற குட்டி யானைக்கு ஒரு தாயை போல காப்பாளர் ஒருவர் செயல்படுவதை காணலாம். காப்பாளரை பாசத்தோடு அணுகும் அந்த குட்டி யானையை கண்டால் நம் கண்களில் நீர் பொங்கும்.மேலும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது "வாடகை தாய் மார்களாக செயல்படுவது, தாய் மற்றும் குடும்பத்தை இழந்து அனாதையான #யானைகளுக்கு உதவும் வழிகளில் ஒன்றாகும். எனவே அவர்கள் ஒரு நாள் காட்டுக்குத் திரும்பலாம், ”என்று வீடியோவுடன் பகிர்ந்திருந்தனர்.
Comments
Post a Comment